காது அசைத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காது அசைத்தல் (Ear wiggling) என்பது காதுகளை முன்னோக்கி, மேலே மற்றும் பின்னோக்கி அசைக்கும் ஓர் செயலைக் குறிக்கிறது. காதுகளுடன் இணைக்கப்பட்டுள்ள மூன்று தசைகளைப் பயன்படுத்தி இந்த இயக்கம் நிகழ்கிறது. பசுக்கள் போன்ற சில பாலூட்டிகள் இந்த தசைகளை நன்கு கட்டுப்படுத்துகின்றன. காதுகளை இழுக்கவும் திசைதிருப்பவும் அவை இவ்வியக்கத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால் மனிதர்களில் பொதுவாக இதை காண்பது கடினமாகும்.

யோசப் எர்சே பேயர் மனிதர்கள் மீது இந்த அசைவு தொடர்பான சோதனைகளை மேற்கொண்டார். ஓர் அலைவரைவியைப் பயன்படுத்தி மனிதர்களின் காது அசைவுகளை அளவிட்டார். ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட பன்னிரண்டு சோதனைகளில் இரண்டு மட்டுமே தன்னார்வக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதை இவர் கண்டறிந்தார். மின்னணு அல்லது பிற கருவிகளைப் பயன்படுத்தி அதிக பயிற்சிகள் அளிப்பதன் மூலமாக மனிதர்களும் காதுகளை விருப்பப்படி அசைக்கமுடியும் என்று இவர் இச்சோதனையின் முடிவாக கூறியுள்ளார். [1][2][3] பெண் எலிகள் காதுகளை அசைத்து, ஆண் எலிகளை கலவிக்கு அழைக்கின்றன. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bair, J. H. (1901), "Development of voluntary control" (PDF), Psychological Review, 8 (5): 474–510, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1037/h0074157
  2. Wegner, Daniel M. (2017), The Illusion of Conscious Will, MIT Press, pp. 29–31, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780262534925
  3. Yates, Aubrey J. (2012), Biofeedback and the Modification of Behavior, Springer Science & Business Media, pp. 6–8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781468435542
  4. McIntosh; Barfield; Geyer (1978), "Ultrasonic vocalisations facilitate sexual behaviour of female rats", Nature, 272: 163–164, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1038/272163a0
"https://ta.wikipedia.org/w/index.php?title=காது_அசைத்தல்&oldid=3067902" இலிருந்து மீள்விக்கப்பட்டது