காதல் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காதல்பறவை
Agapornis roseicollis -eating grass seeds-8.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கிளி
பெருங்குடும்பம்: Psittacoidea
குடும்பம்: Psittaculidae
துணைக்குடும்பம்: Agapornithinae
பேரினம்: Agapornis
செல்பி, 1836
இனங்கள்

ஒன்பது

காதல் பறவை (lovebird) என்பது கிளி இனத்தைச் சார்ந்த பறவையாகும். இதில் ஒன்பது வகைகளுள்ளன. ஆப்ரிக்காவிலும் மடகாசுகரிலும் அதிகம் காணப்படுகின்றன. அவைகளின் அழகான நிறத்திற்காகவும் அவைகள் இணைந்தே இருக்கும் பான்மைக்காகவும் செல்லப் பறவைகளாக விரும்பி வளர்க்கப்படுகின்றன. 10 முதல் 16 செ.மீட்டர் வரை வளரும். குட்டையான வாலைக்கொண்டது. சிவப்பு வண்ண அலகினையும் கண்களைசுற்றி எடுப்பான வெள்ளை வளையத்தினையும் கொண்டுள்ளன. ஆண்பறவையும் பெண்பறவையும் ஒரே மதிரி உள்ளன. வனங்களில் கொட்டைகளைத் தின்று வாழும் இப்பறவைகள் பயிர்களுக்கு சேதத்தினை உண்டாக்கும். பழக்குவதற்கு கடினம், ஆனாலும் மனித குரலினைப் போல் பேசப் பழக்கமுடியும். நீண்ட வாழ்நாளைக் கொண்ட, சண்டைக்குணமுடையன. மற்ற பறவைகளை அருகில் அண்ட விடாது.

ஆதாரம்[தொகு]

  • Britannica Ready Reference Encyclopedia
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_பறவை&oldid=1529094" இருந்து மீள்விக்கப்பட்டது