காட்மோயிண்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்மொயிண்டைட்டு
Cadmoindite
காட்மொயிண்டைட்டு, குத்ரியாவி எரிமலை, தூர கிழக்கு பிராந்தியம், உருசியக் கூட்டமைப்பு
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
தயோசிபைனல் குழு
பல்வண்ணப் பளிங்குருவக் கட்டமைப்பு குழு
வேதி வாய்பாடுCdIn2S4
இனங்காணல்
மோலார் நிறை470.32 கி/மோல்
நிறம்கருப்பு முதல் அடர் பழுப்பு வரை
படிக இயல்புநுண்ணிய எண்முகப் படிகங்கள்
படிக அமைப்புகனசதுரம்
முறிவுசங்குப்புரி
மிளிர்வுவைர மிளிர்வு
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒளியியல் பண்புகள்சமத்திருப்பம்
மேற்கோள்கள்[1][2]

காட்மோயிண்டைட்டு (Cadmoindite) என்பது CdIn2S4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இதுவோர் அரிய காட்மியம் இண்டியம் சல்பைடு கனிமமாகும். சைபீரியாவில் குரில் தீவுகளில் உள்ள குத்ரியாவி எரிமலை, இட்ரூப் தீவில் உள்ள உயர் வெப்பநிலை (450-600 °C) எரிமலை பிளவுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. செக் குடியரசின் போகிமியாவில் உள்ள கேடெரினா நிலக்கரிச் சுரங்கத்திலும் இது கிடைக்கிறது.[2]

CdIn2S4 பல்வண்ணப் பளிங்குருவக் கட்டமைப்பை வெளிப்படுத்துகிறது, இது 8 எண்முகங்களால் ஒருங்கிணைக்கப்பட்டும் 16 நான்முகிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட நேர்மின் அயனி தளங்களைக் கொண்ட ஒரு கன அலகு செல் மூலம் விவரிக்கப்படுகிறது. நேர்மின் அயனித் தளங்களில் Cd(II) மற்றும் In(III) ஆகியவற்றின் விநியோகம் நிலையான எக்சு-கதிர் படிகவியல் ஆய்வு நுட்பங்களால் தெளிவுபடுத்துவது கடினம், ஏனெனில் இரண்டு இனங்களும் சம் எலக்ட்ரான் எண்ணிக்கையைக் கொண்டுள்ளன. ஆனால் செயற்கை மாதிரிகளில் ராமன் நிறமாலை அளவீடுகள் மற்றும் அடர்த்தி செயல்பாட்டுக் கோட்பாடு உருவகப்படுத்துதல்கள் ஆகியவை இரண்டும் நான்முகத் தளங்களில் சுமார் 20% இண்டியம்(III) நேர்மின் அயனிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கின்றன.[3] and density functional theory simulations[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cadmoindite Webmineral Data
  2. 2.0 2.1 Cadmoindite mineral information from Mindat.org
  3. Ursaki, V. V.; Manjon, F. J.; Tiginyanu, I. M.; Tezlevan, V. E. (2002). "Raman scattering study of pressure-induced phase transitions in MIn2S4 spinels". J. Phys.: Condens. Matter 14 (27): 6801. doi:10.1088/0953-8984/14/27/304. 
  4. Seminovski, Y.; Palacios, P.; Wahnon, P. M.; Grau-Crespo, R. (2012). "Band gap control via tuning of inversion degree in CdIn2S4 spinel". Applied Physics Letters 100 (10): 102112. doi:10.1063/1.3692780. Bibcode: 2012ApPhL.100j2112S. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்மோயிண்டைட்டு&oldid=3797940" இலிருந்து மீள்விக்கப்பட்டது