காட்டெருது நடனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காட்டெருது நடனம் (Yak dance) இந்திய மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒன்றியப் பிரதேசமான இலடாக்கு மற்றும் அசாம் மாநிலத்திற்கு அருகிலுள்ள இமயமலையின் தெற்கு விளிம்புகளில் நிகழ்த்தப்படும் ஓர் ஆசிய நாட்டுப்புற நடனமாகும்.[1] திபெத்திய காட்டெருது நடனம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. [2][3]

நடனக் கலைஞர் ஒரு மனிதனை முதுகில் ஏற்றிக்கொண்டு காட்டெருதைப் போல ஆள்மாறாட்டம் செய்து நடனமாடுகிறார். முகமூடி அணிந்த நடனக் கலைஞர் குடும்ப உறுப்பினர்களை (தியோபா கலி) பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மந்திர பறவையின் உதவியுடன் காட்டெருதை கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது.[4] திபெத்திய புத்தாண்டான லோசர் திருவிழாவின் போது காட்டெருதை கௌரவிக்கும் வகையில் காட்டெருது நடனம் ஆடப்படுகிறது.

2017 ஆம் ஆண்டில், புது தில்லி இராச்சுபாத்தில் நடைபெற்ற இந்தியாவின் 68 ஆவது குடியரசு தின விழாவில் காட்டெருது நடனம் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் அணிவகுப்பு மேசையில் சித்தரிக்கப்பட்டது. காட்டெருது நடனம் அருணாச்சலப் பிரதேசத்தின் புத்த பழங்குடியினரான மகாயான பிரிவின் மிகவும் பிரபலமான அபிநயக் கூத்து வடிவங்களில் ஒன்றாகும்.[5] 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் இடம்பெற்ற மற்ற 22 பங்கேற்பாளர்களில் காட்டெருது நடனம் சிறந்த அணிவகுப்பாக முதல் பரிசைப் பெற்றது.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "UNESCO to present Tibetan Yak Dance as Chinese intangible cultural heritage". Tibetan Review. April 11, 2019. https://www.tibetanreview.net/unesco-to-present-tibetan-yak-dance-as-chinese-intangible-cultural-heritage/. 
  2. Kuiper, Kathleen (2010). The Culture of India. Britannica Educational Pub.. பக். 281. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781615301492. https://www.google.co.in/books/edition/The_Culture_of_India/c8PJFLeURhsC?hl=en&gbpv=1&dq=Yak+Dance&pg=PA281&printsec=frontcover. 
  3. Dalaï Lama V.; Walter Graf; René de Nebesky-Wojkowitz (1976). Tibetan Religious Dances. Mouton. பக். 10, 25, 42, 63, 71, 77, 78, 95, 99, 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789027976215. https://www.google.co.in/books/edition/Tibetan_Religious_Dances/pIHbKCpj9HEC?hl=en&gbpv=1&dq=Yak+dance&pg=PA209&printsec=frontcover. 
  4. "Culture, Music and Folk Dance". Eastsikkim.nic.in.
  5. "Yak dance from Arunachal Pradesh to be in Republic Day parade next year". Indian Express. December 20, 2016. https://indianexpress.com/article/india/yak-dance-from-arunachal-pradesh-to-be-in-republic-day-parade-next-year-4437638/. 
  6. "Art & Culture". Tawang.nic.in.
  7. "Yak Dance of Arunachal Pradesh made history". Arunachal24. January 27, 2017. https://arunachal24.in/yak-dance-of-arunachal-pradesh-made-history/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டெருது_நடனம்&oldid=3640387" இலிருந்து மீள்விக்கப்பட்டது