காட்டூன் பீபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டூன் பீபி
Khatoon Bibi
மாகாண சட்டமன்ற உறுப்பினர்
சுகாதாரத் துறையின் நாடாளுமன்றச் செயலாளர்
கைபர் பக்துன்க்வா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 மே 2013
தொகுதிபெண்கள் தனித்தொகுதி-21
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்பாக்கித்தானியர்
அரசியல் கட்சிபாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு
வேலைஅரசியல்வாதி

காட்டூன் பீபி (Khatoon Bibi) பாக்கித்தான் நாட்டின் சுவாபி மாவட்டம் கோகாட்டியின் காரிப் அபாத் பகுதியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு கட்சியின் உறுப்பினராக இவர் பாக்கித்தான் அரசியலில் ஈடுபட்டார்.

தற்போது கைபர் பக்துன்க்வா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். [1] சுகாதாரத் துறையில் நாடாளுமன்ற செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். [2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2013 ஆம் ஆண்டு பாக்கித்தான் பொதுத் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கான பெண்கள் தனித்தொகுதி எண் -21 தொகுதியில் இருந்து பாக்கித்தான் அவாமி இயம்கூரி இத்தேகாத் கட்சியின் சார்பாக போட்டியிட்டார். (பின்னர் பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு கட்சியுடன் இது இணைக்கப்பட்டது) இட்தொகுதியில் வெற்றி பெற்றதை முன்னிட்டு இவர் கைபர் பக்துன்க்வா சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Khatoon Bibi". www.pakp.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
  2. "Parliamentary Secretary Special Assistants". administration.kp.gov.pk. Archived from the original on 28 March 2019. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
  3. The Newspaper's Correspondent (27 May 2013). "Three Swabi women to get reserved seats in PA". www.dawn.com. https://www.dawn.com/news/1014059. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டூன்_பீபி&oldid=3903553" இலிருந்து மீள்விக்கப்பட்டது