காட்டுமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காட்டுமலை (Kattumala; കാട്ടുമല) என்பது கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள உயரமான சிகரங்களில் ஒன்றாகும். இது இரவிக்குளம் தேசிய பூங்கா பகுதியில் அமைந்துள்ள ஆனைமுடிக்கு அடுத்ததாக உள்ள இரண்டாவது மிக உயர்ந்த சிகரமாகும். இது மூணாருக்கு அருகில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,552 மீ உயரத்தில் உள்ளது. இது தென்னிந்தியாவின் எட்டாவது மிக உயர்ந்த சிகரம் ஆகும். பெருமாள் மலைச் சிகரம் இந்த சிகரத்திற்கு மிக அருகில் உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kattumala- Eighth Highest Peaks Of South India". Top10nos.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-20. Archived from the original on 8 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுமலை&oldid=3754875" இலிருந்து மீள்விக்கப்பட்டது