காட்டில் கிடைத்த பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டில் கிடைத்த பறவை
நாட்டுப்புறக் கதை
பெயர்: காட்டில் கிடைத்த பறவை
தகவல்
Aarne-Thompson Grouping:ATU 313A (ஒரு பெண் தனது உருவத்தை
மாற்றிக் கொண்டு தப்பிக்கும் கதை வகை)
Country: ஜெர்மனி
Published in: கிரிம் சகோதரர்களால் சேகரிக்கப்பட்ட
விசித்திரக் கதைத் தொகுப்பு

காட்டில் கிடைத்த பறவை ( Foundling-Bird ) என்பது ஜெர்மன் விசித்திரக் கதையாகும். இது கிரிம் சகோதரர்களால் சேகரிக்கப்பட்டத் தொகுப்பில் எண் 51-ல் சேகரிக்கப்பட்டது.

இது ஒரு பெண் தனது உருவத்தை மாற்றிக் கொண்டு தப்பிக்கும் கதை வகையாகும் [1] தி மாஸ்டர் மெய்ட், தி வாட்டர் நிக்ஸி, நிக்ஸ் நாட் நத்திங் மற்றும் தி டூ கிங்ஸ் சில்ட்ரன் ஆகியவை இதே போன்ற பிற கதைகளாகும்.

கதைச் சுருக்கம்[தொகு]

ஒரு வனத்துறை அதிகாரி பறவைக் கூட்டில் ஒரு குழந்தை இருப்பதை கண்டுபிடித்து, தனது மகள் லென்செனுடன் வளர்க்க அக்குழந்தையை கொண்டு வருகிறார். மேலும் அதற்கு பண்டேவோகல் ("காட்டில் கிடைத்த பறவை") என்று அழைத்தனர். மேலும் லென்செனுடன் குழந்தை நெருங்கி பழகியது.

ஒரு நாள் சமையல்காரி பல வாளிகள் தண்ணீரை வீட்டிற்குள் எடுத்துச் செல்வதைக் கண்டு "எதற்காக இவ்வளவு தண்ணீர் எடுத்துச் செல்கிறீர்கள்" என்று லென்சென் கேட்கிறாள். அதற்கு அந்த சமையல்காரி அடுத்த நாள் சமையலுக்கு அந்தக் குழந்தையை கொதிக்க வைப்பதற்காக அவ்வாறு செய்வதாக அவளிடம் கூறினாள். பயந்து போன லென்சென் பண்டேவோகலிடம் கூறியதும் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிவிடுகின்றனர்.

காணாமல் போன மகளைப் பற்றி வனக்காவலர் தன்னிடம் என்ன கேட்கப் போகிறாரோ என்று பயந்த சமையல்காரி, அவர்களைத் தேட வேலையாட்களை அனுப்புகிறாள். தப்பித்துப்போன பண்டேவோகல் ஒரு ரோஜாப்பூவாகவும், லென்சென் அதன் மீது ஒரு ரோஜாவாகவும் மாறியது. தேடிச் சென்ற வேலையாட்கள் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றனர். ரோஜாப்பூவையும் ரோஜாவையும் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை என்று சமையல்காரியிடம் சொன்னபோது, ரோஜாவை ஏன் டுகிறாள். அவர்கள் மீண்டும் தேடச் சென்றார்கள். இப்போது , பண்டேவோகல் ஒரு தேவாலயமாக மாறியது. லென்சென் அதில் ஒரு சரவிளக்காக மாறினாள். அவர்கள் திரும்பி வந்து சமையல்காரியிடம் தாங்கள் பார்த்ததைச் சொன்னார்கள். சரவிளக்கைத் திரும்பக் கொண்டு வராததற்காக அவர்களைக் கடிந்து கொண்டாள்.

கடைசியாக சமையல்காரி தானே அவர்களை கண்டுபிடிக்க கிளம்புகிறாள். இப்போது பண்டேவோகல் ஒரு குளமாகவும் லென்சென் அதன் மீது நீந்தும் ஒரு வாத்தாகவும் மாறினர். தேடியலைந்த சமையற்காரி அக்குளத்தில் தண்ணீர் குடிப்பதற்காக மண்டியிடுகிறாள். அந்த நேரத்தில் லென்சென் அவள் தலையைப் பிடித்து இழுத்து குளத்திற்குள் மூழ்கடித்தாள்.

குழந்தைகள் மீண்டும் பத்திரமாக வீடு திரும்புகின்றனர்.

இதனையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டில்_கிடைத்த_பறவை&oldid=3666968" இலிருந்து மீள்விக்கப்பட்டது