காட்சிப்பிழை திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காட்சிப்பிழை திரை என்ற தமிழ் மாத இதழ் ஜனவரி 2011 முதல் வெளிவருகிறது. இந்த பத்திரிகை முற்றிலும் தமிழ் வெகுஜன திரைப்படம் குறித்த ஒர் ஆய்விதழாகும். ஆய்வுக்கட்டுரைகள், திரை உலகத்தை பற்றிய அலசல்கள், கலைஞர்களின் நேர்காணல், திரைப்படங்கள் குறித்த கலந்துரையாடல், திரைப்படப் பார்வையாளர்களின் அனுபவப் பகிர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கி வெளிவருகிறது. 2010 ஆம் ஆண்டில் காட்சிப்பிழை என்ற பெயரில் இரண்டு மாதிரி இதழ்கள் வெளியிடப்பட்டன. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் வி. எம். சுபகுணராஜன். மதுரை பாபு, மோனிகா, சுந்தர் காளி, ராஜன் குறை, சஃபி ஆகியோர் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஸ்ரீகுமார் இதன் ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளராக உள்ளார். தியடோர் பாஸ்கரன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி, ஸ்டீபன் ஹியூஸ், எம். எஸ். எஸ். பாண்டியன் ஆகியோர் இதன் ஆலோசனைக்குழுவில் உள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்சிப்பிழை_திரை&oldid=1753337" இலிருந்து மீள்விக்கப்பட்டது