காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளி நாகப்பட்டினம் மாவட்டம், காடம்பாடியில் அமைந்துள்ள பள்ளியாகும். இப்பள்ளி மின் பலகை; நான்கு அறைகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள்; பள்ளி வளாகத்தின் மையத்தில் பெரிய கலையரங்கம்; தாமாகவே சுத்தம் செய்து கொள்ளும் அதி நவீன தானியங்கி கழிவறைகள் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. [1]. ஒரத்தூரில் உள்ள சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியும், காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியும் இணைப் பள்ளிகளாக இணைக்கப்பட்டுள்ளன.[2].

சிறப்பு வசதிகள்[தொகு]

பள்ளியில் உள்ள ஒளிரும் மின் பலகையில் தினமும் புதிய புதிய ஆங்கில சொற்கள் நகர்ந்து கொண்டிருக்கும். அதேபோல் 2 முதல் 16 வரை கணித வாய்பாடுகள் நகரும். காந்தத்தன்மை கொண்ட கரும் பலகைகள் வகுப்புகளில் உள்ளன. இந்தப் பலகைகளில் எழுத்துகளை ஒட்டி மாணவர்கள் புதிய புதிய வார்த்தைகளை உருவாக்குகிறார்கள். வகுப்பறைகளில் அதி நவீன தொடு திரையுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் உருவாக்கப்பட்டுள்ளது. கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாடங்கள் மட்டுமின்றி, சமூக அறிவியல் பாடங்களும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளில் காணொலி காட்சிகளாக மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன.

புரவலர்கள்[தொகு]

  1. ரோட்டரி சங்கம்
  2. ஓஎன்ஜிசி
  3. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

நிறுவனங்களின் உதவியால் புதிய வகுப்பறைகள், சத்துணவு உணவுக் கூடம், தானியங்கி நவீன கழிப்பறைகள், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் என பல வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காடம்பாடி அரசுப்பள்ளி". பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2017.
  2. "இணைப் பள்ளிகள் திட்டத்தில் பயில பள்ளி மாணவர்கள் ஆர்வம்". பார்க்கப்பட்ட நாள் 12 சூலை 2017.