காஜல் நிஷாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஜல் நிஷாத்
பிறப்புகாஜல் நிஷாத்
1 சூன் 1982 (1982-06-01) (அகவை 41)
பச்சாவு, கச்சு மாவட்டம், குசராத்து
மற்ற பெயர்கள்காஜல் ஸ்கை நிஷாத்
பணிநடிகர், கவிஞர், அரசியல்வாதி, நகைச்சுவை நடிகர்
வாழ்க்கைத்
துணை
சஞ்சய் நிஷாத்

காஜல் நிஷாத் (Kajal Nishad) (பிறப்பு 1 ஜூன் 1982) போஜ்புரி திரைப்படங்களிலும், இந்தி தொலைக்காட்சியிலும் பணிபுரியும் ஒரு இந்திய நடிகையும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் பல தொலைக்காட்சித் தொடர்களிலும், போஜ்புரி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1] இவர், சாப் (ஊரகம்) தொகுதியில் இருந்து 2012 உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். [2] இவர், சாப் தொலைக்காட்சியின் நாடகத் தொடரான "லாபடகஞ்ச்" (2009-2010) என்பதில் சாமேலி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததைத் தொடர்ந்து பிரபலமானார்.[3] சாப் தொலைக்காட்சியின் மற்றொரு தொடரான ​​டோடா வெட்ஸ் மைனா வில் இவர் நடித்தார். அதில், இவர் ராம் கட்டோரி சாச்சி என்ற பாத்திரத்தில் நடித்தார். கலர்ஸ் தொலைக்காட்சியின் நாடகத் தொடரான "இஷ்க் கா ரங் சஃபெட்" என்பதில் கனக் திரிபாதி வேடத்திலும் நடித்தார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர், மும்பையில் பிறந்தார்.[1] இவரது பெற்றோர் குஜராத் மாநிலத்தின் கட்சு பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மும்பையில் குடியேறினர். இவர் கோரக்பூர் மாவட்டத்தில் பவாபார் கிராமத்தைச் சேர்ந்த போஜ்புரி திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் நிஷாத்தை மணந்தார்.[5]

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் கோரக்பூர் இளைஞர் பிரிவு இந்திய இளைஞர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார்.[1]அதில் இவர் நான்காவது இடத்தில் வந்தார்.[6]

சர்ச்சை[தொகு]

பிப்ரவரி 4, 2012 இரவு, கக்ராகூரில் பிரச்சாரம் செய்தபோது, ​​மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, இவரும் இவரது ஆதரவாளர்களும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டனர்.[7] இதனையடுத்து, உள்ளூர் காவலர்கள் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராம் புவால் நிஷாத் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் குற்றச்சாட்டைப் பதிவு செய்தனர்.[8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Kajal Nishad: Star power with poetry". Indian Express. 3 February 2012. http://www.indianexpress.com/news/kajal-nishad-star-power-with-poetry/907206/0. 
  2. "Actor kajal nishad to contest election". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 October 2011 இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130411040945/http://articles.timesofindia.indiatimes.com/2011-10-10/news-interviews/30262536_1_contest-actor-election. 
  3. "Actor kajal nishad to contest election". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 October 2011 இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130411040945/http://articles.timesofindia.indiatimes.com/2011-10-10/news-interviews/30262536_1_contest-actor-election. 
  4. Neha Maheshwari (23 June 2015). "Kajal to play Mishal's mother in Filmfarm's next". The Times Group. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.
  5. "Glamorous bahu breaks into poll dance". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 February 2012 இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130411034039/http://articles.timesofindia.indiatimes.com/2012-02-11/lucknow/31049289_1_kajal-contest-by-election-bhojpuri. "..Congress candidate actress Kajal from Kutch...Kajal's parents are settled in Mumbai. "I am a Mumbaikar," .." 
  6. "Cong routed in Rae Bareli, gets 2 seats in Amethi". Indian Express. 7 Mar 2012. பார்க்கப்பட்ட நாள் 14 February 2013.
  7. "BSP cadre thrash Congress 'star' candidate in Uttar Pradesh". India Today. 6 February 2012. பார்க்கப்பட்ட நாள் 14 February 2013.
  8. "Poll talk : Cong nominee hurt, FIR against BSP candidate in Gorakhpur". Indian Express. 6 February 2012. http://www.indianexpress.com/news/poll-talk-cong-nominee-hurt-fir-against-bsp-candidate-in-gorakhpur/908422/. 
  9. "UP: BSP Candidate, Henchmen Booked for Rioting". Outlook. 7 February 2012. Archived from the original on 11 April 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஜல்_நிஷாத்&oldid=3239141" இலிருந்து மீள்விக்கப்பட்டது