காங் ஊ குய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காங் ஊ குய்
காங் ஊ குய் பாத்திரம் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சியில் உள்ளது.
செய்பொருள்வெண்கலம்
அளவு21.6 சமீ உயரம், 42 சமீ விட்டம்
உருவாக்கம்கிமு 11ம் நூற்றாண்டு
தற்போதைய இடம்பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்
பதிவுAsia OA 1977,0404.1

காங் ஊ குய் என்பது மத்திய சீனாவின் எனான் மாகாணத்தில் உள்ள ஊசியான் நகருக்கு அண்மையில் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும்மேற்கத்திய ஒரு வெண்கலப் பாத்திரம். மேற்கத்திய சூ காலப்பகுதிக்கு உரியதாகக் கருதப்படும் இந்தப் பண்டைக்காலச் சீனத் தொல்பொருள் அதிலுள்ள நீண்ட சாசனத்துக்காகப் பெயர்பெற்றது. இது 1977 இலிருந்து பிரித்தானிய அருங்காட்சியகத்தின் ஆசியச் சேகரிப்பின் ஒரு பகுதியாக உள்ளது.[1]

இது முதன்முதலால என்ன சூழலில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும், இதிலுள்ள சாசனத்திலிருந்து இக்கிண்ணம் தற்கால ஊசியான் நகருக்கு அண்மையில் உள்ள வெய் என்னுமிடத்தில் வைக்கப்பட்டு இருந்ததாகத் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். புரூக் செவெல் கொடையின் உதவியுடன் பிரித்தானிய் அருக்காட்சியகம் இதை வாங்குமுன், இதன் உரிமையாளர்களுள் பிரித்தானிய இராசதந்திரியான டுகாட் மால்கம் என்பவரும் ஒருவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 British Museum Collection gui, British Museum, retrieved 22 December, 2014

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்_ஊ_குய்&oldid=1946255" இலிருந்து மீள்விக்கப்பட்டது