காக்கைச் சிறகினிலே (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காக்கைச் சிறகினிலே  
துறை இலக்கியம்
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: வி. முத்தையா
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகத்தார் வி. முத்தையா (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: திங்கள் இதழ்
License TNTAM/2012/43921

காக்கைச் சிறகினிலே என்னும் இதழ் தமிழ் நாட்டின் சென்னை நகரில் இருந்து வெளிவரும் இலக்கியத் திங்கள் இதழ் ஆகும். இவ்விதழ் வி. முத்தையா என்பவரால் 2011 அக்டோபர் 1 ஆம் நாள் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள இக்சா அரங்கில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.[1] முதல் மூன்று இதழ்கள் (2011 அக்டோபர், நவம்பர் திசம்பர்) மாதிரி இதழ்களாக வெளியிடப்பட்டன. 2012 சனவரி திங்கள் முதல் பதிவுபெற்ற இதழாக வெளியிடப்படுகிறது.

ஆசிரியர் குழு[தொகு]

இவ்விதழிற்கு வி. முத்தையா ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் இருக்கிறார். வைகறை இதழாசிரியராக இருக்கிறார். அழகிய பெரியவன், இரா. எட்வின், ச. முகில்நிலா, ச. மேகனா ஆகியோர் ஆசிரியர் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.[2]

2014 ஆகத்து : இறக்கை 3, இறகு 8[தொகு]

வ.எண் தலைப்பு வடிவம் பொருள் படைப்பாளர் பக்கம்
01 அரசை வழிநடத்துவது யார்? கட்டுரை தலையங்கம் 1
02 சிறகுக்குள்ளே… பட்டியல் உள்ளடக்கம் 2
03 ஆத்தங்கரை சிறுகதை இலக்கியம் மதுரை சரவணன் 3
04 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒளவை வழிபாடும் ஒளவையாரம்மன் கோயில்களும் கட்டுரை நாட்டார் வழக்காற்றியல் - தொன்மம் சு. இராமசுப்பிரமணியன் 7
05 தலைமுறையை அழிக்கும் ஆட்டிசம் கட்டுரை உளவியல் மருத்துவம் கோ. சுமித்ரா இங்கர்சால் 12
06 இன்னும் இருக்கும் வேர்கள் கவிதை இலக்கியம் ஈரோடு தமிழன்பன் 15
07 இந்தித் திணிப்பு: எதிர்ப்பும் வெறுப்பும் கட்டுரை அரசியல் எஸ்.கிருஷ்ணமூர்த்தி 16
08 துரும்பர் கட்டுரை சமூகவியல் ஆ. சிவசுப்பிரமணியன் 18
09 மருத நிலத்தின் வரைவுகடாதல் கவிதை இலக்கியம் பூர்ணா 23
10 பட்டணம் பார்க்கப்போன சிவலை நாய் சிறுகதை நாட்டார் வழக்காற்றியல் – ஈழத்து நாட்டார் கதை முகிலன் 24
11 ஆழியாள் கவிதைகள்: மேகத்துக்குள் இயங்கும் சூரியன் கட்டுரை நூல் திறனாய்வு க. பஞ்சாங்கம் 29
12 ஜெயகாந்தன் 80 கட்டுரை விழா செய்தி ஏகன் 32
13 ஒரு நகரம், ஒரு தாய், நான்கு பிள்ளைகள் கட்டுரை திரைப்படம் எஸ். இளங்கோ 37
14 வேர்பிடித்த விளைநிலங்கள் -10: இன்றும் எனக்கு உணவூட்ட ஆசைப்படும் அத்தை தொடர் கட்டுரை தன் வரலாறு ஜோ டி குரூஸ் 40
15 1, 2 கவிதை இலக்கியம் கோசின்ரா 46
16 போதும்… திருவாளர் கண்ணப்ப முதலியார்! கட்டுரை தன் வரலாறு இன்குலாப் 48
17 The Gypsy Godess : காற்றில் கலந்த கதறல் ஒலி கட்டுரை நூல் திறனாய்வு காசி ஆனந்தன் 52
18 தன்னையே பலியிட்ட நவகண்ட சிற்பங்கள் கட்டுரை தொல்பொருளியல் வைகை அனிஷ் 55
19 தண்ணீர் தீவு சிறுகதை இலக்கியம் க.மு.அகமது 58
20 சரிந்த மனிதம் கவிதை இலக்கியம் துரை.நந்தகுமார் 62
21 அந்திம ஆறுதல்
ஆணாதிக்கம்
கவிதை இலக்கியம் அ. பிரமநாதன் 63
22 மடல் திறப்பு கடிதம் வாசகர் கடிதம் 64

சான்றடைவு[தொகு]

  1. காக்கைச் சிறகினிலே இதழ் வெளியீட்டுவிழா அழைப்பிதழ்
  2. காக்கைச் சிறகினிலே, இறக்கை:1 இறகு:1, அக்டோபர் 2011, பக்.01