கவால் கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவால் கிராமம் (Kawal Village-U.P) உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முசாபர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும்[1].

அமைவிடம்[தொகு]

முசாபர் மாவட்டத்தின் தலைநகரான முசாபர் நகரிலிரிந்து புறநகர் பகுதியில் அமைந்துள்ளது கவால் கிராமம்.

நிகழ்வு[தொகு]

ஆகஸ்ட் 27ம் தேதி ஒரு தரப்பைச் சேர்ந்த பெண் ஒருவரை மற்றொரு தரப்பைச்சேர்ந்த ஷானவாஸ் என்பவர் கிண்டல் செய்தார். ஆகையால் அப்பெண்ணின் உறவினர்கள் சச்சின் மற்றும் கவுரவ் இருவரும் சேர்ந்து ஷானவாஸ்சை கொலை செய்தனர். ஷானவாஸ் கொலையைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் ஷானவாஸ் உறவினர்கள் சுட்டுக் கொலை செய்தனர். இதனால் அப்பகுதி காவல் நிலையத்தில் 6 பேர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கலவரம்[தொகு]

இதன் தொடர்ப்பாக 7 ம் தேதி நக்லா மண்டலம் பகுதியில் கூட்டம் ஒன்று போடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் கலவரம் பரவத் துவங்கியது. அது முசாபர் மாவட்டத்திலும் பரவியது. மற்றும் இக்கலவரம் அருகில் அமைந்துள்ள பாக்பட் மாவட்டத்திலும் பரவியது.

இச்சம்பவத்தால் இப்பகுதியில் நடந்த கலவரத்தால் 31 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பத்திரிக்கைகள் தெரிவித்தன. 13.09.2013 கணக்குப்படி மரணம் அடந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது.[2][3].

ராணுவம் வருகை[தொகு]

கவால் கிராமத்தில் நடந்த இச்சம்பவத்தால் 10,000 மாநில பாதுகாப்பு படை குவிக்கப்பட்டது. 1,300 மத்திய ரிசர்வ் படையும், 1,200 அதிவிரைவு படையும் குவிக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு[தொகு]

இப்பகுதியில் 12.09.2013 வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

ஆதாரங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Integrated Management Information System (IMIS)". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-09-10.
  2. http://www.dailythanthi.com/node/454527/2013/09/13/உத்தரப்பிரதேச கலவரம்
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-11. பார்க்கப்பட்ட நாள் 2013-09-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவால்_கிராமம்&oldid=3725321" இலிருந்து மீள்விக்கப்பட்டது