உள்ளடக்கத்துக்குச் செல்

கழிவுக் கட்டுப்படுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கழிவு நிலைமுறை

தனி நபர் ஒருவரோ அல்லது ஒரு மக்கட் சமுகமோ வெளியிடும் கழிவுப் பொருட்களின் அளவைக் குறைக்கும் செயற்பாடோ அல்லது கொள்கையோ கழிவுக் கட்டுப்படுத்தல் எனப்படுகிறது. கழிவுக் கட்டுப்படுத்தல் கழிவு நிலைமுறையில் இரண்டாம் நிலைப் படியிலுள்ள செயற்பாடாகும். தற்காலக் கழிவு மேலாண்மையின் மூன்று முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். கழிவு மீளுருவாக்கம் (Recycling), மறுபயனீடு (Reuse) என்பன ஏனைய இரண்டு பகுதிகளாகும். கடைகளில் விற்பனைப் பொருட்களின் பொதிசெய்யும் அளவைக் குறைத்தல், மீளப் பயன்படுத்தக்கூடிய சாடிகளில் (refill) உள்ள பொருட்களை பயன்படுத்தல் போன்றன கழிவுக் கட்டுப்படுத்தலிற்கான எடுத்துக்காட்டுகளாகும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பிரமிடில் உள்ள படிநிலைகளாவன:

  • கழிவு உருவாதலைத் தடுத்தல்
  • கழிவினை முடிந்த அளவு குறைத்தல்
  • முடிந்த அளவு மீண்டும் பயன்படுத்தல்
  • கழிவுப்பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்தல்
  • ஆற்றல் மீட்டல்