கள்ள சாதுவின் தண்டனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கள்ள சாதுவின் தண்டனை என்பது ஒரு இந்திய தந்திர கதையாகும், இது ஃபெரோஷெபூரில் மேஜர் காம்ப்பெல் என்பவரால் சேகரிக்கப்பட்ட ஒரு பஞ்சாபி கதை. ஆண்ட்ரூ லாங் அதை லிலாக் தேவதை புத்தகத்தில் மூன்றாவது கதையாக சேர்த்துள்ளார்.[1]

சுருக்கம்[தொகு]

ஒரு ராஜா தனது நகரத்தில் ஒரு சாதுவை வரவழைத்து அவர் தனது சீடர்களை சந்திப்பதற்காக ஒரு வீட்டையும் கட்டிக்கொடுத்தார். ராஜாவிற்கு மகன் யாரும் இல்லை ஒரே ஒரு அழகான வயது வந்த மகள் மட்டுமே, அவளுமே பக்கத்து நாட்டு இளவரசனுக்கு நிச்சயிக்கப்பட்திருந்தாள். ஒரு நாள் அரசனது பெண் இந்த சாதுவைப் பார்த்து ஆசிர்வாதம் வாங்க சென்றாள். ஆனால் அந்த சாதுவோ, இவளை காம எண்ணத்துடன் பார்த்தான். அவனது எண்ணத்தை ஊகித்துவிட்டு அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டாள், ஆனால் அந்த கள்ள சாதுவோ, அவள் ஓடும் போது பின்னால் இருந்து ஒரு ஈட்டியை வீசினான், அதனால் அவள் காலில் காயம் ஏற்பட்டது.[2]

அடுத்த நாள் அரசனை காணச்சென்ற சாது ஒரு தீய குணமிக்க அரக்கன் ஒருவன் முன்தினம் தான் கண்டதாகவும் அதை கொல்லும்படிக்கு தனது ஈட்டியை எறிந்த போது அதன் காலில் காயம் ஏற்பட்டதாகவும் சொன்னான். அதை நம்பிய அரசனும் காலில் காயமுள்ள மனிதனை தேடி கண்டுபிடிக்கும் படி உத்தரவிட்டான். அந்தப்படி தேடும் போது கடைசியில் அவனது மகளுக்கு தான் அவ்வாறு காயம் இருந்தது. அதிர்ச்சியடைந்த மன்னனிடம், அந்த சாது குழந்தை பருவத்திலேயே அந்த அரக்க ஆவி உன் மகளை ஆட்கொண்டுவிட்டது என பொய் கூறினதோடு அல்லாமல், ஒரு இரும்பு கூண்டு செய்து அவளை கட்டி அதனுள் வைத்து ஆற்றில் எறிந்து விட சொன்னான். அவ்வரசனும் அப்படியே செய்தான்.[3]

மறுநாள் காலை, அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட இளவரசன் எதுவும் அறியாமல் ஆற்றங்கரையில் வேட்டையாடிக்கொண்டிருந்தபோது ஒரு இரும்பு கூண்டினை கண்டான். அதனுள் பெண்ணொருத்தி இருப்பதையும் அவள் தனக்கு நிச்சயிக்கப்பட்ட இளவரசி தான் என்பதையும் அறிந்து  அவளை விடுவித்து அவள் அந்த இடத்திலேயே திருமணம் செய்து கொண்டான். அந்த கள்ள சாதுவின் சூழ்ச்சியை அறிந்த இளவரசன் அவனை தண்டிக்க எண்ணி  ஒரு பெரிய மலைக் குரங்கை பிடித்து இளவரசிக்கு பதிலாக அந்த கூண்டினுள் வைத்து அதை மீண்டும் ஆற்றில் விட்டுவிட்டான். அந்த சாதுவோ, அவனது சீடர்களை அனுப்பி அந்த கூண்டினை துணியால் முழுவதும் மூடி எடுத்து வர சொன்னான். அவர்களும் தேடி பிடித்து கூண்டோடு கொண்டுவந்தனர். அவர்களிடம் எவ்வளவு அலறல்களைக் கேட்டாலும் தனது அறைக்குள் வர வேண்டாம் என்று கட்டளையிட்டார். இளவரசியின் கழுத்தை நெரிப்பதற்கு ஒரு பட்டு வடத்தை எடுத்தான். சிறிது நேரத்தில் உதவிக்காக அவனது அறையிலிருந்து பெரிய அலறல் சத்தம் கேட்டது ஆனால் அவர்களோ குரு கட்டளையிட்டபடி யாரும் உள்ளே செல்லவில்லை. இறுதியில் அவர்கள் சாதுவின் உடலை தான் கண்டறிந்தனர்.

சாது  இறந்துவிட்டதைக் கேள்விப்பட்ட இளவரசி, குடும்பமாக வந்து தன் தந்தையிடம் சமாதானம் செய்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கள்ள சாதுவின் தண்டனை".
  2. "கள்ள சாதுவின் தண்டனை".
  3. "கள்ள சாதுவின் தண்டனை".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ள_சாதுவின்_தண்டனை&oldid=3657191" இலிருந்து மீள்விக்கப்பட்டது