உள்ளடக்கத்துக்குச் செல்

கல்விசார் கட்டிட வசதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்விசார் கட்டிட வசதிகள் என்பது, கற்றல், கற்பித்தல் முதலிய கல்வித் தேவைகளுக்கான கட்டிடங்களையும் அவற்றோடிணைந்த பிற வசதிகளையும் குறிக்கும். ஒரு காலத்தில் கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மை கொண்ட கட்டிட வசதிகள் தேவை என்னும் கருத்து இருந்ததில்லை. முற்காலத்தில் மரபுவழிக் கல்வி முறையில் மாணவர்களுக்குக் கல்வி புகட்டல் மர நிழலிலும், வீட்டுத் திண்ணைகளிலும், கோயில் மண்டபங்களிலும் இடம் பெற்றுவந்தன. நவீன கல்வி முறைகளைப் பின்பற்றும் தற்காலத்தில் கூட இந்தியா, இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் பிள்ளைகளைகளுக்கு மர நிழல்களில் வகுப்புக்கள் நடைபெறுவது உண்டு. எனினும் தற்காலத்தில் கல்விசார் செயல்பாடுகளின் பலவகையான பிரிவுகளுக்கு, ஒவ்வொன்றுக்கும் தனியே சிறப்பாக்கம் பெற்ற கட்டிடவசதிகள் தேவை என்கின்றனர் கல்வியாளர்கள்.


தற்காலத்தில் மனித வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் ஏற்படும் கல்வித்தேவைகளை நிறைவேற்றுவதற்கு வெவ்வேறான முறைகள் தேவை என்னும் நிலை உள்ளது. எடுத்துக் காட்டாக தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான வகுப்பறைகளும், கல்லூரி வகுப்பறைகளும் அடிப்படையிலேயே வேறுவேறான தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது இன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. கல்விசார் உளவியலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் இவை தொடர்பான சிந்தனை மாற்றங்களுக்குக் காரணமாக அமைகின்றன. அது மட்டுமன்றி கல்வி தொடர்பான கருத்துருக்களிலேயே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வகுப்பறை என்பது ஆசிரியர்களை மையமாகக் கொண்ட ஒரு இடம் என்னும் நிலை தற்காலத்தில் மாறிவருகிறது. கற்றலில், கணினித் தொழில் நுட்பத்தின் பயன்பாடு, காணொளி வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள் என்பன கல்வி முறைகள் பற்றியும், கல்விக்கான இட வசதிகளுக்கிடையே உள்ள தொடர்புகள் பற்றியும் புதிய சிந்தனைகள் உருவாகி வருகின்றன.


வகைகள்

[தொகு]

வெவ்வேறு வகையான கல்வித் தேவைகளுக்குச் சிறப்பாக அமைந்த வசதி வகைகள் பல வகைகளாக உள்ளன. எளிமையான சமூகங்களில் இத்தகைய வகைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், முன்னேறிய நாடுகளிலும், சிக்கலான சமூகத் தேவைகள் கொண்ட தற்காலச் சமுதாயங்களிலும் கல்வி வசதி வகைகள் கூடிய எண்ணிக்கையில் உள்ளன. சில அடிப்படையான வசதி வகைகளாக,

போன்றவற்றைக் குறிப்பிடலாம்.