கல்வர் மேக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்வர் மேக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் (நுகர்வோருக்கு வழங்கும் பெயர் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா) என்பது சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்திய ஊடகக் குழுமமாகும். இந்த நிறுவனம் 26 தொலைக்காட்சி சேனல்களையும்,[தெளிவுபடுத்துக] சோனி லிவ் என்னும் ஸ்ட்ரீமிங் மீடியா[தெளிவுபடுத்துக] தளத்தையும் நடத்துகிறது. [1]

1995 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம், சோனி பொழுதுபோக்கு தொலைக்காட்சி என்ற பெயரில் தனது முதல் தொலைக்காட்சியை துவங்கியது. பின்னர் 1999 ஆம் ஆண்டு சோனி மேக்ஸ் என்ற பெயரில் ஹிந்தி திரைப்பட மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சியை துவங்கியது.

செப்டெம்பர் 2021 ஆம் ஆண்டு ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனதுடன் இணைவதாக அறிவித்தது. இணைப்புக்கு பின் நிறுவனத்தை சோனி நிறுவனம் சொந்தமானதாக இருக்கும். எனினும் அந்த நிறுவனத்தை ஜீ நிறுவனத்தின் தலைவர் புனித் கோயங்கா தலைமையில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.sonypicturesnetworks.com/overview
  2. https://www.financialexpress.com/brandwagon/zee-entertainment-receives-approval-from-stock-exchanges-for-proposed-merger-with-sony/2611191/