கலா ரத்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலா ரத்னா
Kala Ratna
குடிமக்கள் விருது
இதை வழங்குவோர்ஆந்திரப் பிரதேச அரசு
வெகுமதி(கள்)இந்திய ரூபாய்க் குறியீடு 30,000
முதலில் வழங்கப்பட்டது1999
கடைசியாக வழங்கப்பட்டது2017[1]

கலா ரத்னா (Kala Ratna) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். முன்னதாக இவ்விருது அம்சா விருது என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது.[2] யுகாதி எனப்படும் தெலுங்கு புத்தாண்டு நாளன்று ஆந்திரப்பிரதேச அரசும் ஆந்திரப்பிரதேச கலாச்சார மன்றமும் இணைந்து இவ்விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்து நடத்துகின்றன.[3]

ஒவ்வொரு துறையிலும் புகழ்பெற்ற நபர்களின் சாதனைகளை இவ்விருதுகள் கொண்டாடுகின்றன. இலக்கியம், இசை, நடனம், ஓவியம், சிற்பம், நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் கலைகளைச் சேர்ந்தவர்கள் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். விழாவில் கலா ரத்னா விருதுகளுடன் ஆந்திரப் பிரதேச அரசு அதே மேடையில் யுகாதி புராசுகரம் விருதுகளையும் வழங்குகிறது.

விருது[தொகு]

கலா ரத்னா விருதுகளை ஆந்திரப் பிரதேச முதல்வர் வழங்குகிறார். ஒவ்வொரு விருதும் ரூ. 30,000 பணமுடிப்பு, ஒரு பொன்னாடை, தங்கமுலாம் பூசப்பட்ட அம்சா நினைவு பரிசு ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Andhra Pradesh announces names of Kala Ratna (Hamsa) awardees". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.
  2. "Hamsa awards are now Kalaratna". The Hindu. 16 August 2006. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/hamsa-awards-are-now-kalaratna/article3091236.ece. பார்த்த நாள்: 28 June 2019. 
  3. "Archived copy". Archived from the original on 9 April 2016. பார்க்கப்பட்ட நாள் 26 March 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலா_ரத்னா&oldid=3148633" இலிருந்து மீள்விக்கப்பட்டது