உள்ளடக்கத்துக்குச் செல்

கலப்பு கை பழக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலப்புக் கைப்பழக்கம் (mixed-handedness) அல்லது கலப்பு ஆதிக்கம் (cross-dominance) என்பது சில வேலைகளுக்கு ஒரு கையையும் பிற வேலைகளுக்கு மறு கையையும் மாறி மாறி பயன்படுத்தும் ஒரு வகையான தசை இயக்க வெளிப்பாடு ஆகும். எடுத்துக்காட்டுக்கு, கலப்புக் கை பழக்கம் உடையோர் வலது கையில் எழுதினாலும் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு இடது கையைப் பயன்படுத்த இயலும். இது போல வெவ்வேறு செயல்களுக்கு வெவ்வேறு கைகளைப் பயன்படுத்துவர். இருகைப்பழக்கம் (ambidexterity) என்பது இந்த கலப்பு ஆதிக்கத்தின் ஒரு வகையாகும். இரு கை பழக்கமுடையோர் தனது இரு கைகளையும் சரிசமமாகப் பயன்படுத்துவர். எனினும் கலப்புக் கைப்பழக்கம் உடையோர் குறிப்பிட்ட செயல்களுக்கு ஒருகைப் பழக்கமுடையவராக இருப்பர். எனவே பிறர் அவரை குறிப்பிட்டு நோக்காதிருந்தால் அவரது பெரும்பான்மையான கை பழக்கத்தை கொண்டு இடது கை பழக்கமுடையவராகவோ வலது கை பழக்கமுடையவராகவோ தவறாகக் கண்டுகொள்வர்.[1][2][3]

இந்த கலப்பு ஆதிக்கம் கண், காது, கால்கள் போன்ற இட-வல வேறுபாடுகள் உடைய அனைத்து உடற்பாகங்களுக்கும் பொருந்தும். எனினும் இந்த கலப்பு ஆதிக்கம் குறி பார்க்கும் செயல்களில் சில நேரங்களில் தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம்

புகழ் பெற்ற கலப்பு ஆதிக்கம் உடைய நபர்கள்

[தொகு]
  • ஃபில் மைக்கல்சன் - கோல்ஃப் விளையாட்டு வீரர்
  • மைக் வேர் - கோல்ஃப் விளையாட்டு வீரர்
  • ஷான் மைக்கல்ஸ் - புகழ் பெற்ற மல்யுத்த வீரர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ambidextrous - Definition of ambidextrous in English by Oxford Dictionaries". Oxford Dictionaries - English. Archived from the original on December 8, 2015.
  2. "Right, Left, Right, Wrong! - What is Handedness?". www.rightleftrightwrong.com.
  3. "Mixed-handed children more likely to have mental health, language and scholastic problems, study finds". ScienceDaily. Retrieved 25 June 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலப்பு_கை_பழக்கம்&oldid=4165058" இலிருந்து மீள்விக்கப்பட்டது