கலத்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹவாய் தாவரவியற்பூங்காவில் உள்ள கலத்தியா சில்வர் பிளேட்

கலத்தியா என்பது அறிவியல் வகைப்பாட்டின்படி, மரந்தாசியே (Marantaceae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரச் சாதி (genus) ஆகும். இச் சாதியில் ஏறத்தாழ இருபத்தைந்து இனங்கள் உள்ளன. அமெரிக்காவின் வெப்ப வலயப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட இச் சாதியின் பல இனங்கள் வீட்டுத் தாவரங்களாக வளர்க்கப்படுகின்றன. இவற்றுட் சில இனங்களின் இலைகள் வரிக்குதிரையின் கோடுகளை ஞாபகப்படுத்துவதால் வரிக்குதிரைத் தாவரங்கள் (Zebra plants) என அழைக்கப்படுவதுண்டு.

இனங்கள்[தொகு]

கலத்தியா தாவரச் சாதியில் உள்ள இனங்களுட் சில பின்வருமாறு:

கலத்தியா அல்பேர்ட்டீ (Calathea Albertii)
கலத்தியா குரோகாட்டா (Calathea Crocata)
கலத்தியா லான்சிஃபோலியா Calathea lancifolia)
கலத்தியா லொயேசேனென் (Calathea loeseneri)
கலத்தியா லூசே (Calathea louisae)
கலத்தியா மக்கொயானா (Calathea makoyana)
கலத்தியா ஓர்பிஃபோலியா (Calathea orbifolia)
கலத்தியா ஓர்னாட்டா (Calathea ornata)
கலத்தியா ரோசோபிக்டா (Calathea roseopicta)
கலத்தியா ரூஃபிபார்பா (Calathea rufibarba)
கலத்தியா அண்டுலாட்டா (Calathea undulata)
கலத்தியா வார்சேவிச்சீ (Calathea warscewiczii)
கலத்தியா சீபிரீனா (Calathea zebrina)

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலத்தியா&oldid=2186428" இருந்து மீள்விக்கப்பட்டது