கருத்தரித்த பெண்ணின் கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கருத்தரித்த பெண்ணின் கல்

கருத்தரித்த பெண்ணின் கல் (Stone of the Pregnant Woman) அல்லது தெற்குக் கல் என்பது லெபனானின் பால்பெக் எனும் இடத்திலுள்ள உரோமானிய ஒற்றைக்கூறு ஆகும்.[1] இதன் அருகில் மற்றொரு பண்டைய கற்றொகுதியும் சேர்ந்து, வெட்டப்பட்டவற்றிலேயே பாரிய ஒற்றைக்கூறாக உள்ளது. இரண்டு கட்டிடத் தொகுதிகள் உரோமன் கோயில் வளாகத்தின் அருகில் இருப்பதற்காக, மேலதிக முக்கற்களாகச் செய்யப்பட்டிருக்கலாம்.

பெயர்[தொகு]

இப்பெயருக்குப் பின்னால் பல கதைகள் உள்ளன. கருத்தரித்த பெண் ஒருவர் பெரும் கல்லை நகர்த்துவது எப்படி என்று தனக்குத் தெரியும் என்றும் தன் பிள்ளைப்பேறு வரைக்கும் உணவளிக்கும்படியும் பால்பெக் ஊர் மக்களை நம்பச் செய்ததால் அவ் ஒற்றைக்கூறுக்கு அப்பெயர் வந்ததென ஒரு சாரார் கூறுகின்றனர்.[2] மற்றொரு சாரார் கருத்தரித்த ஜின்கள் (தொன்மவியல் உயிரினம் - இசுலாமிய நம்பிக்கை) கல்லை வெட்டி நகர்த்தும் வேலையில் அமர்த்தப்பட்டதால் அப்பெயர் வந்ததெனக் கூறுகின்றனர்.[3] கல்லினைத் தெடும் பெண்ணின் கருவுதலை அதிகரிக்கும் அனுபவம் ஏற்படும் என்ற நம்பிக்கையினை அப்பெயர் பிரதிபலிக்கிறது என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.[4]

உசாத்துணை[தொகு]

  1. Adam, Jean Pierre; Anthony Mathews (1999). Roman Building: Materials and Techniques. Routledge. பக். 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0415208666. 
  2. Ruprechtsberger 1999, pp. 12f.
  3. Hanauer, James Edward (1907). Folk-lore of the Holy Land: Moslem, Christian and Jewish. Duckworth & Company. பக். 74–. http://books.google.com/books?id=r4cTAAAAYAAJ&pg=PA74. பார்த்த நாள்: 12 March 2013. 
  4. Doyle, Paul (2012-03-01). Lebanon. Bradt Travel Guides. பக். 213–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781841623702. http://books.google.com/books?id=tzsRk0hvb_MC&pg=PA213. பார்த்த நாள்: 12 March 2013. 


வெளி இணைப்பு[தொகு]

ஆள்கூறுகள்: 33°59′57″N 36°12′01″E / 33.99917°N 36.20028°E / 33.99917; 36.20028