உள்ளடக்கத்துக்குச் செல்

கருத்தடை மாத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருத்தடை மாத்திரை (Oral contraceptive pill) என்றும் அழைக்கப்படும் வாய்வழி கருத்தடை மாத்திரைகள் கருத்தடை நோக்கத்திற்காக உண்ணப்படும் மருந்து ஆகும்.[1][2]

பெண்

[தொகு]

ஒரு நாளைக்கு ஒரு முறை எடுக்கப்படும் இரண்டு வகையான பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் பரவலாகக் கிடைக்கின்றன:

  • ஒருங்கிணைந்த கருத்தடை மாத்திரையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டின் உள்ளது.[1]
  • புரோஜெசுடோஜென்-மட்டும் உள்ள மாத்திரை
  • ஓர்மெலாக்சிபென் என்பது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஈஸ்ட்ரோஜன் ஏற்பி மாற்றியமைக்கக்கூடிய மாத்திரை ஆகும். இது வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது

அவசர கருத்தடை மாத்திரைகள் உடலுறவின் போது அல்லது உடலுறவிற்குப் பின்னர் சில நாட்களுக்குள் பயன்படுத்தப்படுகின்றன.

  • லெவோனோர்ஜெசுட்ரெல், பிளான் பி என்ற வணிகப் பெயரில் விற்கப்படுகிறது
  • யூலிப்ரிசுடல் அசிடேட்
  • மைபெப்ரிசுடோன் மற்றும் மிசோபிரோசுடோல் ஆகியவை இணைந்து பயன்படுத்தப்படும் போது, கர்ப்பத்தின் முதல் 50 நாட்களில் 95% க்கும் அதிகமாகச் செயல்படும்.

ஆண்

[தொகு]

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் தற்போது வணிக ரீதியாகக் கிடைக்கவில்லை. இருப்பினும் பல சாத்தியக்கூறுகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் உள்ளன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Cooper, Danielle B.; Patel, Preeti; Mahdy, Heba (2023). "Oral Contraceptive Pills". StatPearls Publishing. PMID 28613632. பார்க்கப்பட்ட நாள் 2023-07-02.
  2. "Birth Control Pills". www.plannedparenthood.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-02. {{cite web}}: Text "Contraceptive Pills" ignored (help); Text "The Pill" ignored (help)
  3. https://www.medicalnewstoday.com/articles/where-is-the-male-contraceptive-pill
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருத்தடை_மாத்திரை&oldid=3748414" இலிருந்து மீள்விக்கப்பட்டது