கரினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொண்டையில் கரினாCarina of trachea
குரல்வலையின் குருத்தெலும்பு, தொண்டையும் மூச்சுக்குழாயும். இரட்டைப் பிரிவில் கரினா
மூச்சுக்குழாயின் குறுக்குவெட்டுத் தோற்றம், இரண்டாக பிரிவதற்கு சற்று மேலே உட்புறத்தின் மேல்நிலைக் காணல். (கரினா குறியிடப்படவில்லை;முச்சுக்குழாயை இரண்டாகப் பிரிக்கும் உச்சி)
விளக்கங்கள்
அமைப்புசுவாச மண்டலம்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்தொண்டை கரினா, தொண்டையின் இரட்டைப்பிரிவு
உடற்கூற்றியல்

கரினா (Carina) என்பது தொண்டையின் கீழ்ப்பகுதியில் காணப்படும் குருத்தெலும்பின் உச்சி வளையத்தின் பெயராகும். மூச்சுக்குழாயின் இரண்டு முக்கிய பிரிவுகளுக்கிடையில் இது காணப்படுகிறது. பொதுவாக முச்சுக் குழாயின் கீழ் இறுதியில் மார்பு எலும்பின் நான்காவது முள்ளெலும்பில் மார்புக் கோணத்திற்கு நேர் கோட்டில் இது அமைந்துள்ளது. ஆனால் சுவாசித்தலின் போது இரண்டு முள்ளெலும்புகள் உயரவோ அல்லது தாழவோ செய்யலாம். இந்த உச்சி வளையம் நடுப்பகுதிக்கு இடதுபுறமாக முன்னும் பின்னுமாக செல்கிறது. தொண்டைக்குள் வந்து விழும் வெளிப்பொருள்கள் கிட்டத்தட்ட வலது மூச்சுக்குழாயில் நுழைகின்றன. சுவாசித்தலின்பொழுது வேறு எதாவது வெளிபொருள்கள் கரினாவின் மீது தொட நேர்ந்தால் பலமான இருமல் ஏற்படும். கரினாவின் சளிச்சவ்வுப் பகுதியானது தொண்டை மற்றும் குரல்வளையில் இருமல் எதிர்விளைவுகளைத் தூண்டுவதற்கான ஒரு முக்கியமான பகுதியாகும்.

கரினா விரிவடைதல் மற்றும் சிதைதல் புற்று நோய்க்கான ஒரு முக்கிய அறிகுறியாகும், ஏனென்றால் பொதுவாக முச்சுக்குழாய் பிரியும் பகுதியைச் சுற்றியுள்ள நிணநீர் முனைகளில் புற்று நோய் உருவாகிறது. மூச்சுக்குழாய் காயம் என்பது 60 சதவீத நேரங்களில் கரினாவிற்குள் 2.5 செ.மீ தொலைவிலேயே ஏற்படுகிறது[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chu CP, Chen PP (April 2002). "Tracheobronchial injury secondary to blunt chest trauma: Diagnosis and management". Anaesth Intensive Care 30 (2): 145–52. பப்மெட்:12002920. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரினா&oldid=3850765" இலிருந்து மீள்விக்கப்பட்டது