கரிக்கோல் துருவி

கரிக்கோல் துருவி (Pencil sharpener அயர்லாந்தில் ஒரு பாரர் அல்லது டாப்பர் ) [1] என்பது ஒரு கரிக்கோலின் எழுதும் புள்ளியை கூர்மைப்படுத்துவதற்கான ஒரு கருவியாகும். இவற்றை கைமுறையாகவோ அல்லது மின்சார இயக்கி மூலமாகவோ இயக்கலாம்.
வரலாறு[தொகு]
பிரத்யேகமாக கரிக்கோல் துருவிகள் உருவாகும் முன், கத்தியால் கூர்மைப்படுத்தப்பட்டது .
1822 ஆம் ஆண்டில் ஒரு பிரெஞ்சு நூலில் CA பவுச்சரின் (பாரிஸ்) கார்கோல் துருவியின் கண்டுபிடிப்பு பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அவர் படம் பதி கருவி தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தபோது கார்கோல்களைக் கூர்மையாக்க ஒரு சாதனம் தேவைப்பட்டது. [2] [3] இவரது யோசனை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டதாக அந்த சமயத்தில் வெளியான செருமானிய இலக்கியங்கள் கூறுகின்றன.[4] ஆனால் பௌச்சர் தனது கரிக்கோல் துருவிக்கு காப்புரிமை பெற விண்ணப்பிக்கவில்லை
பிரெஞ்சு கணிதவியலாளர் பெர்னார்ட் லாசிமோன் (லிமோஜஸ்) [5] 1828 ஆம் ஆண்டில் கரிக்கோல் துருவிக்கான காப்புரிமையினைப் பெற விண்ணப்பித்தார்.[6] இவரது காப்புரிமையைப் பயன்படுத்தி பாரிஸில் உள்ள வர்ணபூச்சு ஆபரணக் கடையான பினான்ட் மூலம் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டன. [3]
1830கள் மற்றும் 1840களில், பாரிசைச் சேர்ந்த சில பிரெஞ்சு மக்கள், பிரான்சுவா ஜோசப் லாஹவுஸ் போன்ற எளிய பென்சில் கூர்மைப்படுத்தும் கருவிகளை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தனர்.[7] இந்த சாதனங்கள் ஓரளவு விற்பனை செய்யப்பட்டன. 1847 ஆம் ஆண்டில், பிரெஞ்சு பிரபுவான தியரி டெஸ் எஸ்டிவாக்ஸ், நவீன வடிவத்தில் எளிமையான கையடக்கக் கருவியினைக் கண்டுபிடித்தார். [8] [9] முதல் அமெரிக்கக் கரிக்கோல் துருவியானது 1855 இல் பேங்கோர், மைனேவைச் சேர்ந்த வால்டர் கிட்ரெட்ஜ் ஃபாஸ்டர் என்பவரால் காப்புரிமை பெற்றது [10] இவர் உலகின் முதல் கரிக்கோல் துருவிக்கான நிறுவனத்தை நிறுவி எளிமையாக (கையடக்க அளாவிலான) துருவிகளை பெரிய அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்தார்.சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பாவிலும் "அமெரிக்கன் கரிக்கோல் துருவி" என்று விற்கப்பட்டன.[11]
சான்றுகள்[தொகு]
- ↑ Gerry Coughlan (2007). Irish Language and Culture. Lonely Planet. பக். 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-74059-577-3. https://archive.org/details/irishlanguagecul0000unse.
- ↑ (in fr) Recueil de la Société polytechnique: ou Recueil industriel, manufacturier, agricole et commercial, de la salubrité publique, .... Société polytechnique. 1822. பக். 290–295. https://books.google.com/books?id=Vut7Bt4AjmIC&q=boucher+taille+crayon&pg=PA290.
- ↑ 3.0 3.1 Grahl, André. "History of pencil sharpeners and pointers −1850 Lassimone, Cooper/Eckstein, Lahausse" இம் மூலத்தில் இருந்து 13 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191113171647/http://patent-infos.de/overview/history-pencil-sharpeners-1850.html.
- ↑ Hülsse, Julius A. (1841) (in de). Allgemeine Maschinen-Encyclopädie: A – Beu. Voss. பக். 247. https://books.google.com/books?id=Vm9QAAAAcAAJ&q=boucher.
- ↑ Description des machines et procédés spécifiés dans les brevets d'invention, publ. par C.P. Molard. [With Table générale des vingt premiers volumes...]. https://books.google.com/books?id=BkYFAAAAQAAJ&q=lassimonne+taille+crayon&pg=PA383.
- ↑ Du Commerce, France min (1835) (in fr). Description des machines et procédés spécifiés dans les brevets d'invention, publ. par C.P. Molard. [With Table générale des vingt premiers volumes...]. பக். 583, 81–83. https://books.google.com/books?id=BkYFAAAAQAAJ&q=lassimonne+taille+crayon&pg=PA383.
- ↑ (in fr) Bulletin de la Société d'encouragement pour l'industrie nationale. Société d'encouragement pour l'industrie nationale. 1834. பக். 406–407. https://books.google.com/books?id=Cf7NAAAAMAAJ&q=lahausse+taille+crayon&pg=PA406.
- ↑ (in fr) Description des machines et procédés pour lesquels des brevets d'invention ont été pris sous le régime .... L'Imprimerie Nationale. 1852. பக். 260. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781010644743. https://books.google.com/books?id=hEky1B7Fl0sC&q=estiveaux+taille+crayon&pg=PA260.
- ↑ "20 Things You Didn't Know About... Pencils", Discover magazine, May 2007, retrieved 2009-04-30
- ↑ "Handheld Pencil Sharpeners" இம் மூலத்தில் இருந்து 18 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110718121544/http://www.officemuseum.com/sharpener_small.htm.
- ↑ (in de) Neueste Nachrichten aus dem Gebiete der Politik: 1858. Wolf. 1858. பக். 2623. https://books.google.com/books?id=NdJFAAAAcAAJ&q=amerikanische+bleistiftspitzer&pg=PT1613.
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் Pencil sharpeners தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
கரிக்கோல் துருவி – விளக்கம்
- André Grahl: History of pencil sharpeners and pointers
- Video of production of hand-held pencil sharpeners