கம்லா பெர்சாத் பிசெசார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்லா பெர்சாத்-பிசெசார்
Kamla Persad-Bissessar
திரினிடாட் டொபாகோவின் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 மே 2010
குடியரசுத் தலைவர் சார்ச்சு மாக்சுவெல் இரிச்சாட்சு
முன்னவர் பாட்ரிக் மானிங்
திரினிடாட் டொபாகோவின் எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
25 பெப்ரவரி 2010 – 25 மே 2010
முன்னவர் பாசிடியோ பாண்டே
பின்வந்தவர் கீத் ராவுலி
பதவியில்
26 ஏப்ரல் 2006 – 8 நவம்பர் 2007
முன்னவர் பாசிடியோ பாண்டே
பின்வந்தவர் பாசிடியோ பாண்டே
ஐக்கிய தேசியக் காங்கிரசின் அரசியல் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
24 சனவரி 2010
முன்னவர் பாசிடியோ பாண்டே
சிப்பாரியா தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1995
முன்னவர் கோவிந்த்ரா ரூப்நாரின்
பெரும்பான்மை 15,808
தனிநபர் தகவல்
பிறப்பு 22 ஏப்ரல் 1952 (1952-04-22) (அகவை 71)
பெனல், திரினிடாட் டொபாகோ
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) கிரெகரி பிசெசார்
படித்த கல்வி நிறுவனங்கள் மேற்கிந்தியப் பல்கலைக்கழகம்
பணி வழக்கறிஞர்
அரசியல்வாதி
சமயம் இந்து
இணையம் அதிகாரப்பூர்வத் தளம்

கம்லா பெர்சாத் பிசெசார் (Kamla Persad-Bissessar, பிறப்பு: ஏப்ரல் 22 1952[1]) திரினிடாட் டொபாகோ குடியரசின் ஏழாவதும் தற்போதைய பிரதமரும் ஆவார். இவர் நாட்டின் முதலாவது பெண் பிரதமராக 2010, மே 26 ஆம் நாள் பதவியேற்றார்[2][3].

பெர்சாத்-பிசெசார் ஐக்கிய தேசியக் கங்கிரசு கட்சியின் தலைவர் ஆவார். இது மக்கள் கூட்டமைப்பு என்ற ஐந்து-கட்சிக் கூட்டணியின் முக்கிய தலைமைக் கட்சியாகும். 2010 மே 24 இல் நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் இக்கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

கம்லா பெர்சாத் நாட்டின் முதலாவது பெண் சட்டமா அதிபராகவும், பதில் பிரதமராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர்[4].

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கம்லா, மருத்துவர் கிரெகரி பிசெசார் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உன்டு. லக்ஷ்மி இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

கம்லா 1995 ஆம் ஆண்டில் இருந்து சிப்பாரியா தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 1995 இல் இருந்து நாட்டின் சட்டமா அதிபராகவும் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 22 இல் ஐக்கிய தேசியக் காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்த பின்னர் இவர் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

2010, ஜனவரி 24 இல் இவர் ஐக்கிய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெப்ரவரி 25 இல் இவர் எதிர்க்கட்சித் தலைவரானார்.

பிரதமர்[தொகு]

2010, மே 24 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தேர்தலில் இவரது எதிர்க்கட்சிக் கூட்டணி அப்போதைய பிரதமர் பாட்ரிக் மானிங் இன் ஆளும் கட்சியை தோற்கடித்ததை அடுத்து, கம்லா நாட்டின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]