கம்லா கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்லா கோட்டை (Kamlah Fort) இந்தியாவின் இமாச்சலப்பிரதேச மாநிலத்திலுள்ள[1] மண்டி நகருக்கு மேற்கில் இருக்கும் கம்லா கிராமத்தில் அமைந்திருக்கிறது. [2] 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோட்டை மண்டியை ஆட்சி செய்த சூரச் சென் என்ற இராசாவால் கிட்டத்தட்ட 1625 ஆம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கலாம். [3][4] கம்லா கர் என்றும் இக்கோட்டையை அழைக்கிறார்கள்.

மண்டி இராச்சியம் அதன் பாதுகாப்பிற்கு கோட்டைகளை நம்பியிருந்தது. 1788 ஆம் ஆண்டு முதல் 1826 ஆம் ஆண்டு வரையிலான சூரச் சென் ஆட்சி முதல் ஈசுவரி சென் ஆட்சி வரை பயன்பாட்டிலிருந்த மண்டி மாநிலத்தின் புகழ்பெற்ற 360 கோட்டைகளில் மிகவும் பாதுகாப்பான ஒரு களஞ்சியமாக கம்லா கோட்டை புகழ் பெற்றிருந்தது. [5] மகாராசா ரஞ்சித் சிங் 1830 ஆம் ஆண்டில் இக்கோட்டையைத் தாக்கினார். [1] 1840 ஆம் ஆண்டில் கோட்டை அழிக்கப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மண்டி நகர அரசர்களால் புதுப்பிக்கப்பட்டது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 H. S. Singha (2000). The Encyclopedia of Sikhism (over 1000 Entries). Hemkunt Press. பக். 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7010-301-1. https://books.google.com/books?id=gqIbJz7vMn0C&pg=PA118. பார்த்த நாள்: 20 May 2017. 
  2. Dilagīra, Harajindara Siṅgha (1997). The Sikh Reference Book. Edmonton, Alberta: Sikh Educational Trust for Sikh University Centre, Denmark. பக். 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9695964-2-4. இணையக் கணினி நூலக மையம்:645900789. https://books.google.com/books?id=mRpuAAAAMAAJ. பார்த்த நாள்: 24 May 2017. 
  3. 3.0 3.1 "About Kamlah Fort". Archived from the original on 2020-10-21. பார்க்கப்பட்ட நாள் 2020-10-18.
  4. Kamlah Fort
  5. Hāṇḍā, Omacanda (2008). "Castles and Forts". Buddhist monasteries, castles & forts, and traditional houses. 2. Indus. பக். 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7387-213-6. இணையக் கணினி நூலக மையம்:838866422. https://books.google.com/books?id=3CQnAQAAIAAJ. பார்த்த நாள்: 24 May 2017. 

மேலும் வாசிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்லா_கோட்டை&oldid=3547878" இலிருந்து மீள்விக்கப்பட்டது