கமிட்சு அணை

ஆள்கூறுகள்: 34°40′18″N 136°1′39″E / 34.67167°N 136.02750°E / 34.67167; 136.02750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமிட்சு அணை
Kamitsu Dam
அமைவிடம்நாரா மாநிலம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று34°40′18″N 136°1′39″E / 34.67167°N 136.02750°E / 34.67167; 136.02750
கட்டத் தொடங்கியது1975
திறந்தது2000
அணையும் வழிகாலும்
உயரம்63.5 மீட்டர்
நீளம்264 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு5600 ஆயிரம் கன மீட்டர்
நீர்ப்பிடிப்பு பகுதி18.9 சதுரகிலோ மீட்டர்
மேற்பரப்பு பகுதி33 எக்டேர்

கமிட்சு அணை (Kamitsu Dam) சப்பான் நாட்டின் நாரா மாகாணத்தில் அமைந்துள்ளது. புவியீர்ப்பு வகை அணையாக 63.5 மீட்டர் உயரமும் 264 மீட்டர் நீளமும் கொண்டதாக இது கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக வேளாண்மைக்காகவும் நீர் விநியோகத்திற்காகவும் இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 18.9 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 33 எக்டேர்களாகும். 5600 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1975 ஆம் ஆண்டு தொடங்கி 2000 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kamitsu Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
  2. Morita, A; Okumura, S; Osaki, M (1996). "Placing of concrete in Kamitsu dam construction work by expanded layer method using vacuum cooling system for aggregate; Kamitsudamukensetsukojiniokerukotsuzai no shinkureikyakuhoshikiwomochiitakakuchoreyakohoniyoru concrete dasetsu". Kensetsu No Kikaika. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமிட்சு_அணை&oldid=3504499" இலிருந்து மீள்விக்கப்பட்டது