கமல் பாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமல் பாசு (Kamal Basu) (22 ஆகஸ்ட் 1918 – 21 ஜனவரி 2013)[1] என்பவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கொல்கத்தாவின் நகரத்தந்தையாக 1985 முதல் 1990 வரை பணியாற்றியுள்ளார்.[2]

வாழ்க்கை வரலாறு[தொகு]

இவர் ஒரு முற்போக்குக் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தாத்தா புபேந்திர நாத் போஸ் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றியவர். இவர் ஒரு வழக்கறிஞருமாவார் . இவர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பொருளாதாரத்துறையில் பட்டம் பெற்றவர். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப்பட்டமும் வழக்கறிஞர் பட்டமும் பெற்றவர்.[3][4] பி என் பாசு அன் கோ நிறுவனத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

இறப்பு[தொகு]

21 ஜனவரி 2013 அன்று தனது 94 வயதில் காலமானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Anjali Bose (2019). Sansad Bengali Charitabhidhan Vol.II. Sahitya Sansad, Kolkata. பக். 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7955-292-6. 
  2. "Former Kolkata mayor Kamal Basu dead". Indo-Asian News Service. yahoo.com, 21 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-01-26.
  3. 3.0 3.1 "Former Kolkata mayor Kamal Basu passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 22 January 2013 இம் மூலத்தில் இருந்து 16 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116130215/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-22/kolkata/36483509_1_kamal-basu-cpm-office-alimuddin-street. பார்த்த நாள்: 2013-01-26. 
  4. "Saviour of rajbati". The Telegraph (Calcutta, India: telegraphindia.com, 29 August 2010). 29 August 2010 இம் மூலத்தில் இருந்து 16 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130216213642/http://www.telegraphindia.com/1100829/jsp/calcutta/story_12849710.jsp. பார்த்த நாள்: 2013-01-26. 

மேலும் படிக்க[தொகு]

  • Debasis Bose, Kamal Kumar Basur Paribarik Prekshapat (in Bengali), Kolkata, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்_பாசு&oldid=3901156" இலிருந்து மீள்விக்கப்பட்டது