கமல் நரேன் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமல் நரேன் சிங்
Kamal Narain Singh
22 ஆவது இந்திய முதன்மை நீதிபதி
பதவியில்
25 நவம்பர் 1991 – 12 திசம்பர் 1991
நியமிப்புஇரா. வெங்கட்ராமன்
முன்னையவர்இரங்கநாத்து மிசுரா
பின்னவர்மதுகர் இராலால் கன்யா
தலைவர், 13 ஆவது இந்திய சட்ட ஆணையம்
பதவியில்
1991–1994
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-12-13)13 திசம்பர் 1926
இறப்பு8 செப்டம்பர் 2022(2022-09-08) (அகவை 95)
பிரயாக்குராச்சு, உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்

கமல் நரேன் சிங் (Kamal Narain Singh) இந்தியாவின் 22 ஆவது தலைமை நீதிபதி ஆவார். 1926 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சிர்சாவில் உள்ள எல்ஆர்எல்ஏ உயர்நிலைப் பள்ளியிலும் அலகாபாத்தில் உள்ள எவிங் கிறிசுட்டியன் கல்லூரியிலும் கல்வி பயின்றார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி பட்டம் பெற்றார். 17 நாட்கள் என்ற குறுகிய காலமே இவர் தலைமை நீதிபதியாக இருந்தார். [1]

சட்ட வாழ்க்கை[தொகு]

ஒரு வழக்கறிஞராக, சிங் 1957 ஆம் ஆண்டு முதல் குடிமையியல் , அரசியலமைப்பு மற்றும் வரிவிதிப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இவரது முதல் நீதித்துறை நியமனம் 1970 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 1972 ஆம் ஆண்டில் நிரந்தர நீதிபதியாகவும் இருந்தது. இவர் 1986 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் சேர்ந்தார். 25 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் 1991 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 12 ஆம் தேதி வரை இந்தியாவின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். அலகாபாத் பல்கலைகழக முன்னாள் மாணவர் சங்கத்தால் "பெருமைமிக்க கடந்தகால முன்னாள் மாணவர்" என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. [2] [3]

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று தன்னுடைய 95 ஆவது வயதில் இவர் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nanjappa, Vicky (19 June 2018). "Convention breached just twice: How is the Chief Justice of India appointed" (in en). One India. https://www.oneindia.com/india/convention-breached-just-twice-how-is-the-chief-justice-of-india-appointed-2718437.html. பார்த்த நாள்: 2 May 2019. 
  2. "Our Proud Past". Allahabad University Alumni Association. Archived from the original on 7 July 2012. பார்க்கப்பட்ட நாள் 14 October 2020.
  3. "Our Proud Past". Allahabad University Alumni Association. Archived from the original on 15 January 2008. பார்க்கப்பட்ட நாள் 14 October 2020.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்_நரேன்_சிங்&oldid=3780398" இலிருந்து மீள்விக்கப்பட்டது