கபாலபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கபாலபதி (Kapalabhati ( KAH-pah-lah-BAH-tee என உச்சரிக்கப்படுகிறது)[1] (மேலும் கபால்பதி, அல்லது பாலபாய் என்று கெரண்ட் சமிதாவில்; தேவநாகரியில் : कपालभाति प्राणायाम), என்பது ஷட்ர்காமாவின் முக்கியமான பகுதியாகும் (சிலநேரங்களில் ஷட்க்கிரியா என்றும் அழைக்கப்படுகிறது). இது உடல் சுத்திகரிப்பு நுட்பங்களைக் கொண்ட ஒரு யோகா அமைப்பு ஆகும். கபால்பதி என்பது இரண்டு சொற்களால் ஆனது: கபல் (கபாலம்) என்பதன் பொருள் 'மண்டை ஓடு' (இங்கே மண்டை ஓடு என்பது மண்டை ஓட்டின் கீழ் உள்ள அனைத்து உறுப்புகளும் அடங்கும்) மற்றும் பதி என்ற சொல்லின் பொருள் 'பிரகாசம்' என்பது ஆகும். இந்த செயல்முறை காரணமாக, மூளையின் உள்ளேயும், மூளையின் கீழ் உள்ள உறுப்புகளும் மூளை, சிறு மூளை மற்றும் மூக்கு முனையுடன் இணைந்திருக்கும் தலையில் உள்ள அனைத்து இடைவெளிகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் அந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. இது முக்கியமாக க்ராரியல் சைனசை தூய்மைப்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டதாக இருக்கிறது, ஆனால் இதனால் வேறு விளைவுகளும் உண்டாகின்றன.[2] இந்த முறையிலான கபாலபதியில் மூக்குகள் வழியாக மூச்சை மிக வேகமாக வெளியே விடுதல்வேண்டும் அதன் பிறகு மூச்சை உள்ளிழுத்தல் என்பது தானாகவே நடக்கும்.[3] கபாலபதியில் மூன்று வடிவங்கள் உள்ளன அவை:

  • வாதக்ரமா கபாலபதி
  • வியூதிக்ரா கபாலபதி
  • ஷீத்கிராமா கபாலபதி

குறிப்புகள்[தொகு]

  1. Budilovsky, Joan; Adamson, Eve (2000). The complete idiot's guide to yoga (2 ). Penguin. பக். 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-02-863970-3. https://books.google.com/books?id=b5pE8-Oyly0C. பார்த்த நாள்: 11 April 2011. 
  2. Kapalbhati - Frontal Brain Purification, in Yoga Magazine, a publication of Bihar School of Yoga
  3. Video Discourse on Kapalabhati and Bhastrika by Anandmurti Gurumaa
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபாலபதி&oldid=2441259" இருந்து மீள்விக்கப்பட்டது