கந்தகார் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கந்தகார் (திரைப்படம்)
இயக்கம்மஹ்சன் மக்மல்பஃப்
தயாரிப்புமஹ்சன் மக்மல்பஃப்
கதைமஹ்சன் மக்மல்பஃப்
இசைமகம்மது ரீசா காஃபோரி
நடிப்புநெலோஃபர் பசிரா, கசன் டாண்டாய், சடோவ் தேமெளரி, கோயோடாலா காக்மி, இகிய் ஓக்ட்
ஒளிப்பதிவுஇப்ராகிம் காஃபோரி
படத்தொகுப்புமஹ்சன் மக்மல்பஃப்
வெளியீடு2001
ஓட்டம்85 நிமிடங்கள்
நாடுஈரான்
மொழிபாரசீகம், ஆங்கிலம்,

கந்தகார் (Kandahar) என்பது ஈரானியத் திரைப்படம் ஆகும். ஆப்கானித்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சியில் இருந்த போது எடுக்கப்பட்டது. மஹ்சன் மக்மல்பஃப் இத்திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் பெர்சிய மொழித் தலைப்பு சேபர்-இ-கந்தகார் என இருந்தது. இதன் பொருள் கந்தகாரை நோக்கிப் பயணம் என்பதாகும். மற்றொரு பொருள் நிலவுக்குப் பின்னால் சூரியன் என்பதாகும். இத்திரைப்படம் ஈரானில் திரையிடப்பட்டது குறிப்பாக நியாடாக் அகதிகள் முகாமில் திரையிடப்பட்டது.,[1] ஏனெனில் இந்த அகதிகள் முகாமும் இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது. ஆப்கானிசுத்தானிலும் இத்திரைப்படம் மறைமுகமாகத் திரையிடப்பட்டது. கனடாவில் வசிக்கும் ஆப்கான் பெண் தனது சகோதரியின் கடிதம் கிடைத்ததும் ஆப்கானுக்குத் திரும்பிவருவது தான் இத்திரைப்படத்தின் கதை. இத்திரைப்படம் 2001 ஆண்டு கான் திரைப்பட விழாவில் பங்கு பெற்றது.[2] இயக்குனர் மஹ்சன் மக்மல்பஃப் 2001 ஆம் ஆண்டு இத்திரைப்படத்திற்காக பெஃட்ரிக்கோ ஃபெல்லினி விருதை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றார்.

நடித்தவர்கள்[தொகு]

  • நெலோஃபர் பசிரா - Nelofer Pazira
  • கசன் டாண்டாய் - Hassan Tantai
  • சடோவ் தேமெளரி - Sadou Teymouri
  • கோயோடாலா காக்மி - Hoyatala Hakimi
  • இகிய் ஓக்ட் - Ike Ogut

மேற்கோள்கள்[தொகு]

  1. Mario Falsetto, Liza Béar. The Making of Alternative Cinema: Beyond the frame : dialogues with world filmmakers. Praeger, 2008. ISBN 0-275-99941-6, ISBN 978-0-275-99941-4. Pg 227
  2. "Festival de Cannes: Kandahar". festival-cannes.com. 2009-10-17 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தகார்_(திரைப்படம்)&oldid=2696472" இருந்து மீள்விக்கப்பட்டது