கத்னி குண்டு தடுப்பணை

ஆள்கூறுகள்: 30°18′50″N 77°35′04″E / 30.31389°N 77.58444°E / 30.31389; 77.58444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கத்னி குண்டு தடுப்பணை
கத்னி குண்டு தடுப்பணை is located in அரியானா
கத்னி குண்டு தடுப்பணை
Location of கத்னி குண்டு தடுப்பணை in அரியானா
கத்னி குண்டு தடுப்பணை is located in இந்தியா
கத்னி குண்டு தடுப்பணை
கத்னி குண்டு தடுப்பணை (இந்தியா)
நாடுஇந்தியா
அமைவிடம்யமுனா நகர் மாவட்டம்
புவியியல் ஆள்கூற்று30°18′50″N 77°35′04″E / 30.31389°N 77.58444°E / 30.31389; 77.58444
கட்டத் தொடங்கியது1996
திறந்தது1999
கட்ட ஆன செலவுரூபாய் 168 கோடி
உரிமையாளர்(கள்)அரியான நீர்பாசனத் துறை
அணையும் வழிகாலும்
நீளம்360 m (1,181 அடி)
வழிகால் வகை10 வெள்ளப்பாய்வு கதவு, 8 மதகுகள்
வழிகால் அளவு28,200 m3/s (995,874 cu ft/s)

கத்னி குண்டு தடுப்பணை (Hathni Kund Barrage) என்பது இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் யமுனா நகர் மாவட்டத்தில் யமுனா ஆற்றில் அமைந்துள்ள கான்கிரீட் தடுப்பணை ஆகும். இது நீர்ப்பாசன நோக்கத்திற்காக அக்டோபர் 1996 முதல் ஜூன் 1999 வரை கட்டப்பட்டது. இந்த அணையின் கீழ்ப்பகுதியில் பயனற்ற நிலையில் காணப்படும் தாஜேவாலா தடுப்பணைக்கு மாற்றாகக் கட்டப்ப்டட்டது. கத்னி குண்டு தடுப்பணையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழணை 1873ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. கத்னி தடுப்பணை தண்ணீரை மேற்கு மற்றும் கிழக்கு யமுனா கால்வாய்களில் திருப்பிவிடுகிறது. மேலும் சிறிய நீர்த்தேக்கமும் உருவாகியுள்ளது. இந்த நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஈரநிலத்தில் 31 வகையான பறவைகள் காணப்படுகின்றன.[1]

1970களின் முற்பகுதியிலிருந்து தாஜேவாலா தடுப்பணையை மாற்றுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வந்தன, ஆனால் அரியானா மற்றும் இமாச்சல பிரதேச அரசாங்கங்களுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று ஜூலை 1994 வரை ஏற்படவில்லை. 1999ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அணையின் வேலைகள் முடிக்கப்பட்டாலும், ஒரு சில வேலை தாமதங்கள் காரணமாக மார்ச் 2002 வரை அணைச் செயல்படவில்லை.[2] இந்த அணை 360 மீ. நீளமானது. இதன் நீர் கசிவு பாதை பத்து முக்கிய வெள்ள வடி வாயில்களால் ஆனது. இதன் வலது பக்கத்தில் ஐந்து நீரடிகசிவு பகுதியும் இடதுபுறத்தில் மூன்றும் அதிகபட்சமாக 28,200 m3/s (995,874 cu ft/s) நீரை வெளியேற்றும் தன்மையுடையது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tak, Prakash C.; Jagdish P. Sati; Anjum N. Rizvi (April 2010). Status of waterbirds at Hathnikund Barrage wetland, Yamunanagar District, Haryana, India. 2. பக். 841. http://threatenedtaxa.org/ZooPrintJournal/2010/April/o220026iv10841-844.pdf. பார்த்த நாள்: 10 July 2011. 
  2. "Conclusions" (PDF). Indian Planning Commission. Archived from the original (PDF) on 7 பிப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 10 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Baseline Parameters of JWC" (PDF). Indian Planning Commission. p. 31. Archived from the original (PDF) on 7 பிப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 10 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்னி_குண்டு_தடுப்பணை&oldid=3928511" இலிருந்து மீள்விக்கப்பட்டது