கத்தாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கத்தாலம் (Qatalum) என்பது கத்தார் நாட்டின் தொழிற்சாலை நகரமான மெசயீத்து நகரத்தில் அமைந்துள்ள ஓர் அலுமினிய உருக்கு ஆலை ஆகும். பெட்ரோல் தொழிற்சாலையான கத்தார் ஆற்றல் நிறுவனமும் அலுமினியம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழிற்சாலையான நார்சுக்கு ஐதரோ ஆகியவற்றுக்கு இடையேயன கூட்டு முயற்சியால் கத்தாலம் அலுமினிய உருக்கு ஆலை செயல்படுகிறது. சுவிட்சர்லாந்தை தலைமியிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான ஏசியா பிரவுன் போவேரி என்ற குழுமத்திற்கு 2007 ஆம் ஆண்டில் தொழிற்சாலையின் மின் பாகங்களை உருவாக்க கத்தாலம் நிறுவனம் $140 மில்லியன் தொகைக்கான ஒப்பந்தத்தை வழங்கியது.[1]

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கத்தாலம் திறக்கப்பட்டது. இத்தொழிற்சாலை ஒரே படியில் தொடங்கப்பட்ட மிகப்பெரிய அலுமினியத் தொழிற்சாலையாகும். செப்டம்பர் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இதன் வருடாந்திர கொள்ளளவு 585,000 மெட்ரிக் டன் அலுமினியமாகும்.[2] அனைத்தும் மதிப்பு கூட்டப்பட்ட அலுமினிய வார்ப்பிரும்பு தயாரிப்புகளாக அனுப்பப்படும். நிலையான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக 1350 மெகாவாட்டு இயற்கை எரிவாயு மின் நிலையமும் இங்கு கட்டப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ABB wins $140-million smelter project in Qatar". ABB Group. 20 August 2007. பார்க்கப்பட்ட நாள் 18 September 2015.
  2. "Qatalum at full production". Qatalum. 25 September 2011. பார்க்கப்பட்ட நாள் 18 September 2015.
  3. "Qatar Aluminium (Qatalum)". Qatar Petroleum. பார்க்கப்பட்ட நாள் 18 September 2015.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தாலம்&oldid=3848144" இலிருந்து மீள்விக்கப்பட்டது