உள்ளடக்கத்துக்குச் செல்

கத்தரிக்கோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு பொதுமைப்பாடான கத்தரிக்கோல்

கத்தரிக்கோல் (ஒலிப்பு) எனப்படுவது, கையினால் தொழிற்படுத்தக்கூடிய வெட்டும் கருவியாகும். இது ஒரு சோடி உலோகத்தாலான வள்ளேடுகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வள்ளேடும் எதிரெதிரே காணப்பட்டு, அதன் கூரிய முனைகள் ஒன்றாக இணையும் வகையில் ஒரு புறமாகக் காணப்படும் கைபிடியினால் விசை வழங்கப்படுகின்ற போது, வெட்டுதல் சாத்தியமாகின்றது. கத்தரிக்கோல் கொண்டு பலதரப்பட்ட ஊடகங்கள் வெட்டப்படுகின்றன. அவற்றுள், கடதாசி, கடதாசிப்பெட்டி, உலோகத்தாள், மெல்லிய பிளாஸ்டிக், துணி, கயிறு மற்றும் கம்பி என்பவை குறிப்பிடத்தக்கவை. அத்தோடு, கத்தரிக்கோல் கொண்டு முடி மற்றும் உணவுப் பதார்த்தங்கள் என்பன வெட்டப்படுகின்றன.

வெவ்வேறு தேவைகளுக்காக, பல்வேறுபட்ட வகைகளில் கத்தரிக்கோல்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சிறுவர்கள் பயன்படுத்தும் கத்தரிக்கோல் கொண்டு கடதாசியை மட்டுமே வெட்டமுடியும். பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு, அதன் வள்ளேட்டு முனைகள் சற்று கூர்மையாகவே அமைக்கப்பட்டுள்ளன. முடி மற்றும் துணி ஆகியவற்றை வெட்டுவதற்காக செய்யப்பட்டுள்ள கத்தரிக்கோல் கூர்மையாக உருவாக்கப்பட்டிருக்கும். உலோகம் மற்றும் புற்புதர்கள் ஆகியவற்றை வெட்டுவதற்கான கத்தரிக்கோல் மிகக் கூர்மையுடையதாக உருவாக்கப்பட்டிருக்கும்.

விசேடித்த கத்தரிக்கோல்களில் ஒன்றான தையல் கத்தரிக்கோல், பெரும்பாலும், ஒரு வள்ளேடு கூர்மையாகவும் மற்றைய வள்ளேடு சற்று கூர்மை குறைந்ததாயும் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த ஏற்பாடே துணிகளை வினைத்திறனாக வெட்டுவதற்கான சாத்தியத்தை உருவாக்கின்றது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தரிக்கோல்&oldid=2553612" இலிருந்து மீள்விக்கப்பட்டது