கதுவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கதுவா இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் கதுவா மாட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்துடன் தெற்கு எல்லைக்கு அருகில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி மன்றமாகும். இந்த நகரம் மாநிலத்தின் நுழைவாயிலாகவும், இராணுவ பிரசன்னம் கொண்ட ஒரு பெரிய தொழிற்துறை நகரமாகவும் உள்ளது.

ஜம்மு நகரத்திற்குப் பிறகு ஜம்மு பிரிவில் இரண்டாவது பெரிய நகரம் கதுவா ஆகும். கதுவா பொது சாலை வழியாக ஜம்மு, சண்டிகர், தில்லி, பதான்கோட் மற்றும் அமிர்தசரஸ் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. கதுவா நகரம் 21 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

புவியியல்[தொகு]

கதுவா 32.37 ° வடக்கு 75.52 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] இது சராசரியாக 393 மீட்டர் (1,289 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. நகரம் மூன்று ஆறுகளால் சூழப்பட்டுள்ளது. கதுவா நகரம் காத் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது பல ஆண்டுகளாக பெரிதும் மாசுபட்டுள்ளது மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் நுழைவாயில் ஆகும். கதுவா ஜம்முவிற்கு தெற்கே 88 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

புள்ளிவிபரங்கள்[தொகு]

இந்த நகரம் ஶ்ரீநகர் , ஜம்மு நகரம் மற்றும் அனந்த்நாக் ஆகிய நகரங்களுக்குப் பிறகு மாநிலத்தின் நான்காவது பெரிய நகரம் ஆகும். 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி கதுவா நகரத்தின் மக்கட் தொகை 1,91,988 ஆகும்.[2]

1,000 ஆண்களுக்கு 853 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது.[3] ரஞ்சித் சாகர் அணை கட்டப்பட்டதன் காரணமாக கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து பசோலி தெஹ்ஸிலிலிருந்து இடம்பெயர்ந்ததால் நகரத்தின் மக்கட் தொகை திடீரென அதிகரித்துள்ளது.

கதுவா நகரில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். இந்துக்கள் 91.34% வீதமும், சீக்கியர்கள் 3.75% வீதமும், கிறிஸ்தவர்கள் 2.27% வீதமும், முஸ்லிம்கள் 2.68% வீதமும் காணப்படுகின்றனர். கிறிஸ்தவ மற்றும் சீக்கிய மக்கள் முறையே கிறிஸ்தவ குவோட்டர் மற்றும் சவான் சாக் ஆகிய பகுதிகளில் அதிகமாக வாழ்கின்றனர். நகரத்தை சுற்றிலும் ஏராளமான சூஃபி ஆலயங்கள் இருப்பதால் மக்களுக்கு சூஃபிய கலாச்சாரத்திலும் வலுவான நம்பிக்கை உள்ளது. பெரும்பாலான மக்கள் டோக்ரி முதன்மை மொழியாக பேசப்படுகின்றது. உருது உத்தியோகபூர்வ மொழியாகும்.

காலநிலை[தொகு]

கதுவா நகரம் துணை வெப்பமண்டல காலநிலையைக் கொண்டது. கோடை வெப்பமாக இருக்கும் மற்றும் 41 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம். , குளிர்காலத்தில் வெப்பநிலை பொதுவாக 2 பாகை செல்சியஸாக அல்லது சில நேரங்களில் பூச்சியமாக குறைகிறது. ஆண்டு மழைவீழ்ச்சி 700 செ.மீ பதிவாகும். பானி தெஹ்ஸில் போன்ற மாவட்டத்தின் மேல் பகுதிகளில் பனிப்பொழியும் போது கதுவா நகரம் பனியை அனுபவிக்காது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆலங்கட்டி குவியல்களைக் கொண்ட கடுமையான ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும். ஆனால் அவை மிகக்

குறைவாக நடைப்பெறும். அதிக காற்று மாசுபாடு காரணமாக கடுமையான புகை குளிர்காலத்தில் பொதுவானது.

போக்குவரத்து[தொகு]

கதுவா ஜம்மு நகரத்திலிருந்து 80 கி.மீ தொலைவிலும், கத்ராவிலிருந்து 120 கி.மீ தூரத்திலும் உள்ளது. கத்துவாவிலிருந்து ஜம்மு மற்றும் பதான்கோட்டிற்கு ரயில் இணைப்புகள் உள்ளன. கோபிந்த்சரில் உள்ள கதுவா ரயில் நிலையம் நகர மையத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. நகர மையத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ள பதான்கோட் விமான நிலையம் கதுவா நகரத்திற்கு சேவை புரிகின்றது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதுவா&oldid=3238051" இருந்து மீள்விக்கப்பட்டது