கதிரவமறைப்பு, ஏப்ரல் 8, 2024
ஏப்ரல் 8, 2024-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
மறைப்பின் வகை | |
இயல்பு | முழு மறைப்பு |
காம்மா | 0.3431 |
அளவு | 1.0566 |
அதியுயர் மறைப்பு | |
காலம் | 268 வி (4 நி 28 வி) |
ஆள் கூறுகள் | 25°18′N 104°06′W / 25.3°N 104.1°W |
பட்டையின் அதியுயர் அகலம் | 198 km (123 mi) |
நேரங்கள் (UTC) | |
பெரும் மறைப்பு | 18:18:29 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 139 (30 of 71) |
அட்டவணை # (SE5000) | 9561 |
ஏப்ரல் 8,2024 திங்களன்று முழுச் சூரிய கிரகணம் ஒன்று இடம்பெறுகின்றது. இது வட அமெரிக்கா முழுவதும் தெரிவதுடன் பெரிய வட அமெரிக்க கிரகணம் என்று சில ஊடகங்களால் அழைக்கப்படுகிறது.[1][2][3] புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு கடந்து செல்லும்போது கதிரவ மறைப்பு ஏற்படுகிறது. இதனால் புவியிலிருந்து பார்ப்பவர்களுக்கு கதிரவனின் பகுதி மறைந்து தோன்றுகிறது. சந்திரனின் தோற்றவிட்டம் சூரியனை விட பெரியதாக இருக்கும்போது, முழு கதிரவமறைப்பு நிகழ்கிறது. அதாவது அனைத்து நேரடி சூரிய ஒளியையும் தடுத்து, பகலில் இருளாக மாறுகிறது. புவியின் மேற்பரப்பில் ஒரு குறுகிய பாதையில் மட்டுமே முழுமை ஏற்படுகிறது, பகுதி சூரிய கிரகணம் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலமுள்ள சுற்றியுள்ள பகுதியில் தெரியும்.
சுற்றுப்பாதை வீச்சின் அண்மைய நிலை கழித்து மறு நாளே இது நிகழ்கிறது. இதனால் நிலவின் தோற்ற விட்டம் சராசரியை விட 5.5% பெரியதாக இருக்கும். 1.0566 என்ற அளவு, அதன் மிக நீண்ட கால முழுமை 4 நிமிடங்கள் மற்றும் 28.13 விநாடிகளாக மெக்ஸிகன் நகரமான நாசாஸ், டுராங்கோ, (சுமார் 4 மைல் (6 கி.மீ.) வடக்கே மற்றும் அருகிலுள்ள நகரமான டோரியோன், கோகியிலா அருகே இருக்கும்.
இந்தக் கதிரவமறைப்பு கனடிய மாகாணங்களில் பெப்ரவரி 26,1979க்குப் பிறகு காணக்கூடிய முதல் முழு கதிரவமறைப்பாக இருக்கும். சூலை 11,1991 க்குப் பிறகு மெக்ஸிகோவில் முதலாவதும் ஆகத்து 21,2017 க்குப் பிறகு அமெரிக்காவில் முதலாவதும்[4][5] 21 ஆம் நூற்றாண்டில் மெக்ஸிகோ, அமெரிக்கா மற்றும் கனடாவில் தெரியும் ஒரே முழு கதிரவமறைப்பும் இதுவாகும்.[6] ஆகஸ்ட் 23,2044 வரை அமெரிக்காவில் காணக்கூடிய கடைசி முழு கதிரவமறைப்பாகவும் இது இருக்கும்.
தோன்றும்திறன்
[தொகு]
கதிரவமறைப்பின் முழுமை பசிபிக் பெருங்கடலில் 230 மைல்கள் (370 கி.மீ.) வடக்கே மார்க்வேசாஸ் தீவுகள் மற்றும் வட அமெரிக்காவில், பசிபிக் கடற்கரை தொடங்கி, மெக்ஸிகோ, அமெரிக்கா மற்றும் கனடா வழியாக வடகிழக்கு திசையில் ஏறும் போது அத்திலாந்துப் பெருங்கடலிலும் முடியும் வரை தோன்றும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jamie Carter (April 8, 2019). "Countdown Begins To 'Great North American Eclipse', The Longest, Darkest and Best For 21 Years". Forbes. Retrieved February 27, 2020.
- ↑ Doris Elin Urrutia (August 21, 2019). "It's Not Too Early to Plan for the Great American Total Solar Eclipse of 2024". Space.com. Retrieved February 27, 2020.
- ↑ Sebastian Kettley (August 23, 2019). "Solar eclipse: Another 'Great American Eclipse' is coming – Get ready for solar spectacle". Daily Express. London. Retrieved February 27, 2020.
- ↑ Aziz, Saba (February 12, 2024). "Total solar eclipse: All you need to know about the rare celestial event". Global News. Retrieved February 13, 2024.
- ↑ Dickinson, Terence (August 3, 2017). "Canada's last solar eclipse in 1979". Maclean's. Archived from the original on August 12, 2017. Retrieved August 24, 2017.
- ↑ "Location of Total Solar Eclipse of April 8, 2024". GreatAmericanEclipse.com. Retrieved September 9, 2017.