கதிரச்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கதிரச்சம் (radiophobia) என்பது எக்சு-கதிர் போன்ற அயனாக்கும் கதிர்வீச்சுக்கள் பற்றிய அச்சத்தைக் குறிக்கும். இச்சொல் பொதுவாக மருத்துவ நோக்கில் அல்லாது அணுக்கரு ஆற்றல் குறித்த பொதுவான எதிர்ப்பலை பற்றியதே.

சிலருக்கு அதிக உயரத்தையோ பூச்சிகளையோ இருட்டையோ இப்படி பலபல பொருட்களைப் பற்றிய அச்சம் உள்ளது. அதுபோல் சிலருக்கு கதிர் வீச்சினைப் பற்றிய அச்சம் உள்ளது. இதற்கு காரணம் இல்லாமலில்லை. ஆனாலும் இது மிகைப்படுத்தப் பட்டுள்ளது. போதிய கவனம் எடுத்துக் கொண்டால் இந்த அச்சம் தேவையற்ற ஒன்று எனத் தெரியும். அணு உலைகளை அடுத்து காணப்படும் கதிர் வீச்சு இயற்கைப் பின்புல அளவைவிடக் குறைவானதே. நமது உடலில் பொட்டாசியம் 40, கரி 14, மிகவும் குறைந்த அளவு பிற கதிரியக்கம் உடைய தனிமங்களும் காணப்படுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரச்சம்&oldid=1480408" இருந்து மீள்விக்கப்பட்டது