கண்ணீர் அறிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்ணீர் அறிவியல் (TearScience) என்பது 2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் அமெரிக்க நிறுவனமாகும். கண் மருத்துவம் தொடர்பான சாதனங்களை உருவாக்கி, தயாரித்து அவற்றை இந்நிறுவனம் சந்தைப்படுத்துகிறது. உலர் கண் நோய்க்கு காரணமான மெய்போபியன் எனப்படும் இமைகீழ் சுரப்பிகளின் செயலிழப்பைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் இச்சாதனங்கள் உதவுகின்றன.[1] உலர் கண் நோய் 25 மில்லியன் அமெரிக்கர்களை பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். உலர் கண் நோய்க்கு காரணமான மெய்போபியன் சுரப்பி செயலிழப்புக்கான கண்ணீர் நிறுவனத்தின் லிபிஃப்ளோ சிகிச்சையஒ 2011 ஆம் ஆண்டு சூன் மாதம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகரித்துள்ளது.[2] தற்போது உலகம் முழுவதும் 250 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தலைமையகம் வட கரோலினாவின் மோரிசுவில்லில் உள்ளது.

கண்ணீர்ப் படலத்தின் எண்ணெய் கொழுப்பு அடுக்கின் தடிமனை அளவிடுவதற்கு லிபிஃப்ளோ கண்மேற்பரப்பு குறுக்கீட்டுமானி பயன்படுகிறது.[3] உலர் கண் அறிகுறிகளைக் குறைக்க பாதிக்கப்பட்ட மெய்போபியன் சுரப்பிகளைத் தூண்ட லிபிஃப்ளோ வெப்பத் துடிப்பு அமைப்பைப் பயன்படுத்துகிறது. இவ்வமைப்பு தடுக்க வெப்பம் மற்றும் அழுத்தத்தைப் பயன்படுத்துகிறது.[4] to reduce dry eye symptoms.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hawaiian Eye & Retina 2021 Meeting - Home". www.healio.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-27.
  2. "A new system, the LipiFlow, for the treatment of meibomian gland dysfunction.". Cornea 31 (4): 396–404. 2012. doi:10.1097/ico.0b013e318239aaea. பப்மெட்:22222996. 
  3. "Correlation between quantitative measurements of tear film lipid layer thickness andmeibomian gland loss in patients with obstructive meibomian gland dysfunction and normal controls.". American Journal of Ophthalmology (Epub 2013 Mar 7) 155 (6): 1104–1110. June 2013. doi:10.1016/j.ajo.2013.01.008. பப்மெட்:23465270. https://archive.org/details/sim_american-journal-of-ophthalmology_2013-06_155_6/page/1104. 
  4. "Restoration of meibomian gland functionality with novel thermodynamic treatment device-a case report.". Cornea 29 (8): 930–933. August 2010. doi:10.1097/ICO.0b013e3181ca36d6. பப்மெட்:20531168. 
  5. Greiner JV. (April 2012). "A single LipiFlow® Thermal Pulsation System treatment improves meibomian glandfunction and reduces dry eye symptoms for 9 months.". Current Eye Research 37 (4): 272–278. doi:10.3109/02713683.2011.631721. பப்மெட்:22324772. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணீர்_அறிவியல்&oldid=3594190" இலிருந்து மீள்விக்கப்பட்டது