கண்ணீரைப் பின் தொடர்தல் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்ணீரைப் பின் தொடர்தல் ஜெயமோகன் எழுதிய கட்டுரை நூல். சிறந்த 20 இந்திய நாவல்களாக ஆசிரியர் கருதுபவற்றின் கதைகளைச் சொல்லி சிறப்புகளை அறிமுகம் செய்கிறது.

உள்ளடக்கம்[தொகு]

இந்நூலில் ஜெயமோகன் அவரது மனம் கவர்ந்த இருபத்திரண்டு நாவல்களை ஆராய்கிறார். வங்க நாவல்களான ஆரோக்கிய நிகேதனம் (தாராசங்கர் பானர்ஜி), பதேர்பாஞ்சாலி (விபூதிபூஷண் பந்த்யோபாத்யாயா), நீலகண்ட பறவையைத்தேடி (அதீன் பந்த்யோபாத்யாய), கன்னட நாவல்களான மண்ணும் மனிதரும் (சிவராம காரந்த்), ஒரு குடும்பம் சிதைகிறது (எஸ்.எல்.பைரப்பா), உருது நாவலான அக்னி நதி (குர் அதுல் ஐன் ஹைதர்), குஜராத்தி நாவலான வாழ்க்கை ஒரு நாடகம் (பன்னாலால் பட்டேல்) போன்றவற்றை உலகப் பேரிலக்கியங்கள் எதற்கும் நிகரானவை என்று தன் கருத்தாகச் சொல்கிறார்.

தொடுப்பு[தொகு]