கண்ணம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கண்ணம்பாடி, இந்திய மாநிலமான கர்நாடகத்தின் மைசூர் மாவட்டத்தில் இருந்த ஊராகும். 1910 ஆம் ஆண்டில் கிருட்டினராச சாகர் அணையைக் கட்ட இந்த ஊர் தேர்வு செய்யப்பட்டது. 1924 ஆம் ஆண்டு அணை கட்டப்பட்டபின் அணையின் நீரில் இவ்வூர் மூழ்கடிக்கப்பட்டது. இவ்வூரிலிருந்த ஹொய்சாளர் கட்டிடக்கலைச் சிறப்பை விளக்கும் வண்ணம் கட்டப்பட்ட பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பெருங்கோவிலான வேணுகோபால சுவாமி கோவிலும் மூழ்கடிக்கப்பட்டது. [1]

இவ்வூர் மூழ்கடிக்கப்படும் முன்பு இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஹொசக்கண்ணம்பாடி (கன்னடத்தில் புதுக் கண்ணம்பாடி) என்ற ஊருக்கு மீள்குடியேற்றப்பட்டனர்.

சிறப்பு[தொகு]

இந்த ஊரில் புகழ் பெற்ற "கிருட்டினராச சாகர் அணை"யும், பிருந்தாவன் தோட்டமும் உள்ளன.
கிருட்டினராச சாகர் அணைக்கு கண்ணம்பாடிக் கட்டே என்ற பெயர் கன்னடத்தில் வழங்கப்பட்டுவருகின்றது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணம்பாடி&oldid=2063583" இருந்து மீள்விக்கப்பட்டது