உள்ளடக்கத்துக்குச் செல்

கண்டராதித்தர் திருவிசைப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்டராதித்தர் திருவிசைப்பா, திருவிசைப்பாத் தொகுதியில் இருபதாம் பதிகமாக உள்ளது. இது கண்டராதித்தர் பாடிய பதிகம்.

இது பாடப்பட்ட பண்பஞ்சமம்’. இந்தப் பாடல் ‘சாரளபானம் ’ என்னும் பண்ணில் பாடப்பட்டதாக ஓர் ஏட்டுப்பிரதி குறிப்பிடுகிறது.[1] இவரைச் ‘சிவஞான கண்டராதித்தர் எனச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன. இதில் உள்ள பத்து பாடல்களும் தில்லை அம்பலவாணனோடு ஒன்றுபடுவது என்றோ என இவர் ஏங்குவதாக உள்ளன. எட்டாம் பாடலில் தில்லைக்குப் பொன் வேய்ந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலாசிரியரின் காலம் 10-ஆம் நூற்றாண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. மு. அருணாசலம் (2005). "பத்தாம் நூற்றாண்டு". தமிழ் இலக்கிய வரலாறு (இரண்டாம் பதிப்பு ed.).