உள்ளடக்கத்துக்குச் செல்

கணினி அமைப்பியக்க மீட்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணினி அமைப்பியக்க மீட்பு (சிஸ்டம் ரெஸ்டோர் System Restore)
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
அண்மை வெளியீடு6.0.6001 / 4 பெப்ரவரி, 2008
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோஸ்
மென்பொருள் வகைமைDisk defragmenter
உரிமம்மைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்

கணினி அமைப்பியக்க மீட்பு அல்லது கணினி மீட்பு அல்லது சிஸ்டம் ரெஸ்டோர் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் படிமுறையானது, கணினியின் அமைப்பியக்க (சிஸ்டம்) கோப்புக்கள், ரெஜிஸ்டிறி நிறுவப்பட்ட மென்பொருட்கள் போன்றவற்றில் குழப்பம், குற்றம் பழுதுகள் ஏற்படும் போது பழையநிலைக்குக் கொண்டுவரப் பயன்படுகின்றது. இது விண்டோஸ் மில்லேனியம், எக்ஸ்பி, விஸ்டா இயக்குதளங்களில் ஓர் உறுப்பாக அமைந்துள்ள பகுதி. விண்டோஸ் சேர்வர் (சர்வர்) இயக்குதளங்கள் அமைப்பியக்க மீட்பை (சிஸ்டம் ரெஸ்டோர்) உள்ளடக்கப்படாவிட்டாலும் விண்டோஸ் செர்வர் 2003 இல் விண்டோஸ் எக்ஸ்பியுடன் வந்த அமைப்பியக்க மீட்பை (சிஸ்டம் ரெஸ்டோரைப்) பயன்படுத்த இயலும் என்றாலும் இதற்கு நிறுவன ஒப்புதல் கிடையாது.[1]

விண்டோஸ் விஸ்டாக் கணினிகளில் நிழற்படி (ஷடோ காப்பி Shadow Copy) தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட இடைமுகம் கிடைக்கின்றது.

மேலோட்டம்[தொகு]

கணினி அமைபியக்கத்தை மீட்கும் (மீள்விக்கும்) செயற்பாட்டில் பயனர்கள் கணினியை மீள்விப்புப் புள்ளிகளை (நிலைகளை) உருவாக்கலாம். ஏற்கனவே இருக்கும் மீட்புப் புள்ளிகளுக்கு மீள்விக்கலாம் விரும்பினால் மீள்விப்புத் தேர்வுகளைக் கூட மாற்றியமைக்கலாம். அத்துடன் மீள்விப்புக் கூட மீளத் திரும்பக்கூடியதே. இடவசதியைப் பொறுத்து பழைய மீட்புப் புள்ளிகள் கருதாமல் கைவிடப்பட்டுப் புதிய மீள்விப்புப் புள்ளிகள் உருவாக்கப்படும். பெரும்பாலான பயனர்களுக்கு கடந்த சிலவாரங்களுக்கு மீள்விப்புப் புள்ளிகள் இருக்கலாம் அல்லது இடவசதிக் குறைவான அல்லது வினைத்திறனாகக் கணினியை இயக்க விரும்பும் பயனர்கள் பயனர்களுக்கு மீள்விப்பை இடைநிறுத்தியும் வைத்திருக்கலாம்.

சிஸ்டம் ரெஸ்டோர் *.exe, *.dll போன்ற சில கோப்புக்களை ஆவணப்படுத்தி மீள்விப்பதற்காகச் சேமித்து வைக்கும்.[2] அத்துடன் பெரும்பாலான டிவைஸ் டிரைவர் என்கின்ற வன்பொருட்களை வேலைசெய்ய வைக்கும் மென்பொருட்களையும் ஆவணப்படுத்திக் கொள்ளும்.

கண்காணிக்கப்படும் வழங்கள்[தொகு]

கீழ்வரும் வழங்கள் ஆவணப்படுத்தப்படும்.

 • ரெஜிஸ்டிறி
 • விண்டோஸ் கோப்பு பாதுகாப்பு கோப்புறையில் (Windows File Protection (Dllcache)) உள்ள கோப்புக்கள்
 • கணினியின் பயனர்கள் (கணினிக்கு உரிய பயனர்கள் டொமைன் பயனர்கள் அல்ல)
 • COM+ and WMI தரவுத் தளங்கள்
 • IIS Metabase
 • தனிச்சிறப்பான கோப்புக்கள் கண்காணிக்கப்படும்.[2]

மீள்விப்புப் புள்ளிகள்[தொகு]

மீள்விப்புப் புள்ளிகள் கீழ்வரும் சூழல்களில் உருவாக்கப்படும்

 • சிஸ்டம் ரெஸ்டோரைப் பற்றி அறிந்த விண்டோஸ் இண்ட்ஸ்ரோலர் (Windows Installer) மூலமாக நிறுவப்படும் மென்பொருட்கள்,.
 • விண்டோஸ் மேம்படுத்தல்கள் விண்டோஸ் இயங்குதளத்தை மேம்படுத்தும் பொழுது.
 • விண்டோஸ் வன்பொருள் தர ஆய்வுகூடத்தால் (விண்டோஸ் ஹார்ட்வெயார் குவாலிட்டி லேப் Windows Hardware Quality Labs.) எண்ணிம (டிஜிட்டல்) முறையில் கையொப்பமிடாத டிவைஸ் டிரைவர்களை நிறுவும் பொழுது.
 • 24 மணித்தியாலங்களாகக் கணினியைப் பாவிக்கும் பொழுது (விண்டோஸ் மில்லேனியத்தில் 10 மணித்தியாலங்கள்) அல்லது 24 மணித்தியாலத்தில் இவற்றில் எது முன்னுக்கு வருகின்றதோ அதன்படி உருவாக்கப்படும்.
 • 24 மணிநேரத்திற்குக் கூடுதலாகக் கணினியை துவக்காது வைத்திருந்தால் கணினியை துவக்கும் பொழுது மீள்விப்புப் புள்ளி உருவாக்கபடும்.
 • பழைய மீள்விப்புப் புள்ளிகள் இடவசதியைப் பொறுத்து முதலில் உருவாக்கப்பட்டதே முதலில் அழிக்கப்படும்.
 • முதன் முறையாகக் கணினியை ஆரம்பிக்கும் பொழுதும் மீட்புப் புள்ளியை உருவாக்கும்.

குறிப்பு[தொகு]

ஆவணங்களை சேமிக்கப்பயன்படும் My Documents இல் உள்ள ஆவணங்களும் *.doc மற்றும் *.exe நீட்சியைக் கொண்ட கோப்புக்களும் மீள்விக்கப்படாது.

மேற்கோள்கள்[தொகு]

 1. How to install System restore on server 2003
 2. 2.0 2.1 MSDN System Restore Reference: Monitored File Extensions