கணித தேசிய அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கணித தேசிய அருங்காட்சியகம்
National Museum of Mathematics
(MoMath)
National Museum of Mathematics 11 East 26th Street entrance.jpg
நுழைவாயில்
நிறுவப்பட்டதுநவம்பர் 17, 2009 (2009-11-17) (chartered)
அமைவிடம்11 கிழக்கு 26ஆவது தெரு
மன்காட்டன், நியூயார்க்கு நகரம்
இயக்குநர்சின்டி லாரன்சு
Public transit accessநியூயார்க் நகர சப்வே:
வலைத்தளம்momath.org


கணிதத்திக்கான தேசிய அருங்காட்சியகம் (National Meuseum of Mathematics) அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள மன்காட்டன் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.[1][2]. கணிதத்திக்கான தேசிய அருங்காட்சியகம் 2012 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 15 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. வட அமெரிக்காவில் கணிதத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரே அருங்காட்சியகம் இதுவாகும்.[3] மேலும், இடைவினைக்கு வாய்ப்புள்ள 30 கணித காட்சிப்பொருள்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.[4][5] இந்த அருங்காட்சியகம் கணிதத்தைப் பற்றிய பொதுமக்களின் பார்வையையும், புரிதலையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[6]

வரலாறு [தொகு]

2006 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில்  நீள் தீவில் கணிதத்திக்காக செயல்பட்டு வந்த ஒரே அருங்காட்சியகம் மூடப்பட்டது.[7] இதைத் தொடர்ந்து இந்த அருங்காட்சியகத்தின் நிறுவனர் கிளென் ஒயிட்னி மற்றும் குழுவினர் ஒரு புதிய அருங்காட்சியகத்தை நிறுவ முயற்சித்தனர். 2009 ஆம் ஆண்டில் நியூயார்க் மாநில கல்வித் துறையிடமிருந்து ஒரு உரிமை ஆவணத்தை அவர்கள் பெற்றனர்.[6] அதன் பின்னர் ஒரு நான்காண்டு காலத்திற்குள் 22 மில்லியன் டாலர்கள் நிதியைத் திரட்டினர்.[8]

இந்த நிதி ஆதாரத்துடன், 19000 சதுர அடி (1800 சதுர மீட்டர்) பரப்புள்ள இடத்தை வட சரித்திர மாவட்ட மடிசன் சவுக்கம் என்ற இடத்தை குத்தகைக்கு எடுத்தனர். உள்ளூர் மக்களால் கட்டுமான வடிவமைப்பிற்கு சில எதிர்ப்புகள் இருந்த போதும்,[9] நியூயார்க் நகர நிலக்குறியீடுகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் கட்டுமானத் துறையினால் அனுமதி வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rocca, Mo (2013-03-04). "A new museum devoted to math". CBS News. http://www.cbsnews.com/8301-3445_162-57572198/a-new-museum-devoted-to-math/. பார்த்த நாள்: 4 March 2013. 
  2. Rothstein, Edward (2012-12-13). "Opening the Doors to the Life of Pi". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2012/12/14/arts/design/museum-of-mathematics-at-madison-square-park.html?smid=pl-share&_r=0. பார்த்த நாள்: 4 March 2013. 
  3. Keene, Tom (2013-02-22). "New York's Coolest New Museum, Starring Heidi Klum". Bloomberg. https://www.bloomberg.com/video/new-york-s-coolest-new-museum-starring-heidi-klum-FeAnmwShQ82K_tkIzChNmg.html. பார்த்த நாள்: 4 March 2013. 
  4. Colvin, Jill. "new-Math Museum Hopes To Make Numbers Fun For Kids". New York: Dnainfo.com. Archived from the original on 2013-09-26. https://web.archive.org/web/20130926165146/http://www.dnainfo.com/new-york/20110418/midtown/new-math-museum-hopes-make-numbers-fun-for-kids. பார்த்த நாள்: 2009-04-11. 
  5. Kit Dillon. "MoMath No Problems: North America’s Only Math Museum Now Open in Madison Square". New York Observer. பார்த்த நாள் December 17, 2012.
  6. 6.0 6.1 "About – The Museum of Mathematics". Momath.org (2009-11-17). பார்த்த நாள் 2013-11-17.
  7. "Goudreau Museum of Mathematics in Art and Science". The Math Museum. பார்த்த நாள் 2013-11-17.
  8. Chang, Kenneth (2011-06-27). "One Math Museum, Many Variables". New York Times (New York). https://www.nytimes.com/2011/06/28/science/28math.html. 
  9. Johnson, Mary (2012-01-26). "Landmarks Commission Gives Thumbs Up to MoMath Facade Plans". New York: Dnainfo.com. Archived from the original on 2013-06-05. https://web.archive.org/web/20130605104618/http://www.dnainfo.com/new-york/20120126/murray-hill-gramercy/landmarks-commission-gives-thumbs-up-momath-facade-plans.