உள்ளடக்கத்துக்குச் செல்

கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்புலிகளின் ஒரு சிறப்புப் படையணி. சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று கடல் கலங்களை அல்லது வேறு இலக்குகளைத் தாக்குவதே இந்த அணியின் செயற்பாடு. ஆங்கிலத்தில் இத்தகைய படையணியை Frogman என அழைப்பர். இவர்களைத் தமிழில் தவளைமனிதர் எனலாம்.

இந்தப் படையணி லெப். கேணல் கங்கை அமரனின் பெயரைத் தாங்கியது. இவரே கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவினை வழிநடத்தியவர் [1]. கங்கை அமரன் 2001 ஆண்டு இலங்கைப் படையின் ஆழ ஊடுருவும் பிரிவால் கொல்லப்பட்டார்.[2]

மே 09, 2008 அன்று கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு ஏ-520 துருப்புக்காவி-விநியோகக்கப்பலை மூழ்கடித்தது. இது இவர்களின் முக்கிய தாக்குதல்களில் ஒன்று [3]

இவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களாக கருதப்படுபவை

[தொகு]
  • கொழும்புத் துறைமுகத் தாக்குதல்
  • 1995 ஏப்ரல் 19 திருகோணமலை துறைமுகத்தில் ரணசுறு சூரயா மீது தாக்குதல்
  • கற்பிட்டிக்கடற்பரப்பில் வைத்து சகரவர்த்தன கப்பல் மீதான தாக்குதல்

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. திருமலையில் கடற்படை கப்பல் அழிப்பு யாழ் கருத்துக்களம்
  2. புலிகள் தளபதி கொலை: பதில் தாக்குதலுக்கு தயார் ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 30, 2001 [1][தொடர்பிழந்த இணைப்பு]
  3. Sea Tiger commandos sink SLN supply ship in Trinco Harbour TamilNet, Friday, 09 May 2008 [2]

வெளி இணைப்புகள்

[தொகு]