கங்காதர் காதே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கங்காதர் காதே (Gangadhar Gade) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அம்பேத்காரிய சமூக அரசியல் ஆர்வலராக இவர் செயல்பட்டார். இந்திய குடியரசுக் கட்சியின் முன்னாள் தலைவராகவும் பாந்தர் குடியரசுக் கட்சியின் தலைவராகவும் அறியப்படுகிறார். [1] [2] மகாராட்டிர மாநிலத்தின் ஓர் அமைச்சராகவும் பணியாற்றினார். பிரபலமான பௌத்த தலைவராகவும் காடே மராத்வாடா பல்கலைக்கழகத்தின் நமந்தர் அந்தோலனின் தலைவராகவும் இருந்தார். [3] [4] 1977 ஆம் ஆண்டு சூலை மாதம் 7 ஆம் தேதியன்று அன்று, தலித் பாந்தர்சு பொதுச் செயலாளர் கங்காதர் காடே முதலில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரை மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு வைக்க வேண்டும் என்று கோரினார். [5] [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "NCP ties up with Panthers Republican Party". Oct 25, 2011. http://www.indianexpress.com/news/ncp-ties-up-with-panthers-republican-party/865005/. பார்த்த நாள்: 22 June 2013. 
  2. "Statue of equality should come up at Indu Mill site: Ambedkar". Jan 2, 2012. 
  3. "युतीचे बोलणे झाल्यावर आमची बोलणी- माजीमंत्री गंगाधर गाडे". 26 March 2015. பார்க்கப்பட்ட நாள் 6 October 2023.
  4. Dalit Painther : Bhoomika Evam Aandolan. 24 November 2017.
  5. "मराठवाडा विद्यापीठाच्या नामांतर लढ्याचं स्मरण कशासाठी?". https://www.bbc.com/marathi/india-42662010. 
  6. "Namantar Andolan : जाणून घ्या, 'नामांतर ते नामविस्तार' घटनाक्रम". 14 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காதர்_காதே&oldid=3855107" இலிருந்து மீள்விக்கப்பட்டது