ஓல்கா சும்சுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓல்கா சும்சுகா
தாய்மொழியில் பெயர்Ольга В'ячеславівна Сумська
பிறப்பு22 ஆகத்து 1966 (1966-08-22) (அகவை 57)
லிவிவ், உக்ரேனிய சோவியத் சோசலிச குடியரசு, சோவியத் குடியரசு
தேசியம்உக்ரைனியர்
படித்த கல்வி நிறுவனங்கள்கீவ் தேசிய நாடக, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பல்கலைக்கழகம்
பணிநடிகை, அரசியல்வாதி
உறவினர்கள்நடாலியா சும்சுகா
விருதுகள்
  • செவ்செங்கோ தேசியப் பரிசு (1996)
  • உக்ரைன் மக்கள் பரிசு (2009)

ஓல்கா சும்சுகா (உக்ரைனியன்: Ольга В'ячеславівна Сумська, பிறப்பு: 22 ஆகத்து 1966) ஒரு உக்ரைனிய நாடக, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் செவ்செங்கோ தேசியப் பரிசு மற்றும் மக்கள் கலைஞர் ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார்.[1] இவர் 2006 இல், கீவ் நகரின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.[2]

வாழ்க்கை வரலாறு[தொகு]

ஓல்கா சோவியத் குடியரசின் லிவிவ் நகரில் பிறந்தார். இவரது மூத்த சகோதரியான நடாலியாவும் நடிகராக உள்ளார். 1987 ஆம் ஆண்டில் ஓல்கா கீவ் நகரின் தேசிய நாடக, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1988 மற்றும் 2006 க்கு இடைப்பட்ட காலத்தில் இவர் உருசிய நாட்டின் லெசுயா உக்ரைங்கா தேசிய திரை நாடக குழுவில் ஒரு மேடை நடிகையாக இருந்தார்.[3] ஓல்காவின் முதல் கணவர் நடிகர் யெவன் பேப்பர்னி ஆவார். இவர்களது திருமணம் 1990 இல் விவாகரத்தில் முடிவடைந்தது. பேப்பர்னியுடனான திருமணத்திலிருந்து, ஓல்காவிற்கு அன்டோனினா (பிறப்பு 1 ஜூன் 1990) என்ற மகள் உள்ளார்.[4] இவரது தற்போதைய கணவர் நடிகர் விட்டலி போரிசியுக் உடன் ஹன்னா (பிறப்பு 2 மார்ச் 2002) என்ற மகளை வளர்த்து வருகிறார். 2017 இல், இவர் சிரிப்பு லீக்கின் (லீக் ஆப் லாப்டர்) நடுவராக பணியாற்றினார்.[5]

அங்கீகாரம்[தொகு]

  • "என்ட்ராப்மென்ட்" மற்றும் "கிரைம்ஸ் வித் மேனி அன்நோன்" என்ற தொலைக்காட்சித் திரைப்படங்களுக்காக செவ்செங்கோ தேசியப் பரிசு (1996).[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About recognition with state awards of Ukraine". Presidential ukase.
  2. "Olha Sumska is the next mayor of Kyiv?". Obozrevatel. 9 February 2006.
  3. "Olga SUMSKAYA: "I haven't been playing in the theater since April. In general. Colleagues from the Russian Drama wrote that they don't want to go on the same stage with the actress Sumskaya. God, how can I live with this?"". Boulevard. 2020-09-03. Archived from the original on 2020-09-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-14.
  4. ""Daddy's daughter". The daughter of Sumy Paperna showed a black-and-white photo with her mother / Showbiz Boulevard". 2020-06-28. Archived from the original on 2020-06-28. பார்க்கப்பட்ட நாள் 2023-05-14.
  5. "Olga Sumskaya was confused with Olya Polyakova". 2021-01-25. Archived from the original on 2021-01-25. பார்க்கப்பட்ட நாள் 2023-05-14.
  6. "Shevchenko National Prize laureates 1962–2013". Shevchenko National Prize Committee official website.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்கா_சும்சுகா&oldid=3918170" இலிருந்து மீள்விக்கப்பட்டது