ஓதற்பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓதற்பிரிவு

 • ஒதற்பிரிவு என்பது கல்வி கற்கும் பொருட்டு ஏதோ ஒரு நிலத்தின் தலைவன் அந்த நிலத்திற்கே உரிய தனது தலைவியைப்பிரிந்து செல்வதைக் குறிக்கும்.
 • இவ்வகையிலானப் பிரிவென்பது மூன்றாண்டுகள் வரை நீடிக்கலாம்.
 • ஓதற்பிரிவின்போது தலைவன் தலைவியை நினைத்துப் புலம்புவதோ இடையில் திரும்புவதோ இல்லை.

இலக்கியத்தில் ஓதற்பிரிவு[தொகு]

இல்லறத்தின் போது, தலைவன் வேற்று நாட்டுக்குச் சென்று ஆங்குள்ளோருக்குத் தான் அறிந்தவற்றைக் கற்பித்தும், அவர்களிடம் இருந்து கற்றும் வருவான். தொல்காப்பியத்தில் இவ்வாறு பிரியும் காலம் "ஓதற்பிரிவு" எனச் சொல்லப்பட்டுள்ளது.[1] (தொல். பொ. 25.)[2] இதற்கு மூன்று ஆண்டு காலம் எனவும் வகுக்கிறது.[1]

இவ்வாறு தமிழ்நாட்டிற்கும் பல இடங்களில் இருந்தும் பலர் வந்து கற்றுச் சென்றுள்ளனர். திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகிய மடங்கள் பல ஆண்டுகளாகத் தமிழ், வட மொழிக் கல்லூரிகளாக இருந்துள்ளன.[1]

மாணிக்கவாசகர் தனது எட்டாம் திருமுறையில் ஓதற்பிரிவை நான்காக வகுத்துள்ளார்:[3][4]

 • கல்விநலங்கூறல்
 • பிரிவுநினைவுரைத்தல்
 • கலக்கங்கண்டுரைத்தல்
 • வாய்மொழிகூறித் தலைமகள் வருந்தல்

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 ஓதற்பிரிவு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தமிழ்
 2. University of Madras Lexicon
 3. ஓதற்பிரிவு, திருக்கோவையார் - எட்டாம் திருமுறை], TVU.ORG
 4. 08.கோவை.020 ஓதற்பிரிவு, shaivam.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓதற்பிரிவு&oldid=3023207" இருந்து மீள்விக்கப்பட்டது