ஒல்கிலூடோ அணுமின் நிலையம்

ஆள்கூறுகள்: 61°14′13″N 21°26′27″E / 61.23694°N 21.44083°E / 61.23694; 21.44083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒல்கிலூடோ அணுமின் நிலையம்
Olkiluoto Nuclear Power Plant
2015 ஆம் ஆண்டில் ஒல்கிலூடோ அணுமின் நிலையம்
நாடுபின்லாந்து
அமைவு61°14′13″N 21°26′27″E / 61.23694°N 21.44083°E / 61.23694; 21.44083
நிலைஇயங்குகிறது
அமைப்பு துவங்கிய தேதிஅலகு 1: பெப்ரவரி 1, 1974 (1974-02-01)
அலகு 2: நவம்பர் 1, 1975 (1975-11-01)
அலகு 3: ஆகத்து 12, 2005 (2005-08-12)
இயங்கத் துவங்கிய தேதிஅலகு 1: அக்டோபர் 10, 1979 (1979-10-10)
அலகு 2: சூலை 10, 1982 (1982-07-10)
அலகு 3: ஏப்ரல் 16, 2023 (2023-04-16)
உரிமையாளர்தியோலிசுடென் வோய்மா நிறுவனம்
இயக்குபவர்தியோலிசுடென் வோய்மா நிறுவனம்
இணையதளம்
Olkiluoto nuclear power plant

ஒல்கிலூடோ அணுமின் நிலையம் (Olkiluoto Nuclear Power Plant) வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தில் உள்ள இரண்டு அணு மின்நிலையங்களில் ஒன்றாகும். மற்றொன்று இரண்டு அலகுகள் கொண்ட உலோவிசா அணுமின் நிலையமாகும். பின்லாந்தின் அணுசக்தி நிறுவனமான தியோலிசுடென் வோய்மா நிறுவனத்தால் இந்த அணுமின் நிலையம் இயக்கப்படுகிறது. ஒல்கிலூடோ அணுமின் நிலையம் ஒல்கிலூடோ தீவில், பொத்னியா வளைகுடாவின் கரையில், மேற்கு பின்லாந்தில் உள்ள யூரசோகி நகராட்சியில், இரவுமா நகரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவிலும் போரி நகரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் (31 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.

ஒல்கிலூடோ அணுமின் நிலையத்தில் இரண்டு கொதிக்கும் நீர் உலைகள் உள்ளன. ஒவ்வொன்றும் 890 மெகா வாட்டு திறன் கொண்டவையாகும். இவற்றைத் தவிர மூன்றாம் தலைமுறை அழுத்த நீர் உலை வகை 1600 மெகாவாட்டு திறன் கொண்ட இ.பி.ஆர் எனப்படும் பரிணாம சக்தி உலை ஒன்றும் இங்கு உள்ளது.[1] இதன் மூலம் இம்மூன்றாவது அலகு தற்போது ஐரோப்பாவில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த அணு மின் நிலைய அலகாகவும், உலகளவில் மூன்றாவது மிகவும் சக்திவாய்ந்த அலகாகவும் சிறப்பு பெறுகிறது.[2][2] மூன்றாவது அலகின் கட்டுமானம் 2005 ஆம் ஆண்டு தொடங்கியது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வணிகச் செயல்பாடு திட்டமிடப்பட்டது. ஆனால் இச்செயல்பாடு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதியன்றுதான் தொடங்கியது.[3]

1 மற்றும் 2 அலகுகள்[தொகு]

1 மற்றும் 2 அலகுகளில் கொதிநீர் அணு உலைகள் உள்ளன. ஒவ்வொன்றும் 890 மெகாவாட்டு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.[4] ஏ.எசு.ஈ.ஏ. என்ற சுவீடிய நிறுவனம் இதன் முக்கிய ஒப்பந்ததாரர் ஆவார். இது சுவீடனிலுள்ள அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வெசுட்டிங்கவுசு மின்சார நிறுவனத்தின் ஒரு பகுதியாகும். விசையாழி மின் ஆக்கிகளை ஏ.பி.பி எனப்படும் சுவீடிய-சுவிட்சர்லாந்து பன்னாட்டு நிறுவனம் வழங்குகிறது. அலகுகளின் கட்டமைப்பு ஏ.எசு.ஈ.ஏ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. சுவீடனின் உத்காம்பு நிறுவனத்தால் உலை அழுத்தக் கலன்களும், உலை உள் பாகங்கள், இயந்திர கூறுகள் போன்றவை பின்னாட்டம் நிறுவனத்தாலும் கட்டப்பட்டன. பின்லாந்தின் இசுட்ரோம்பெர்க் நிறுவனம் மின்சார உபகரணங்களை வழங்கியது.[5] அனுமின் நிலையத்தின் அலகு 1 அடோமிராகென்னசால் நிறுவனத்தாலும் அலகு 2 இயூகோலா மற்றும் டைகடிமா நிறுவனத்தாலும் கட்டப்பட்டன.[6][7] 1978 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இதன் ஆரம்ப முக்கியத்துவத்தை அடைந்தது. 1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனது வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது.[6] 1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அலகு 2 அதன் ஆரம்ப முக்கியத்துவத்தை அடைந்தது மேலும் அது 1982 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது.[8]

அணு உலைகளின் அசல் சக்தி 660 மெகாவாட் ஆகும். அவை 1983-1984 ஆம் ஆண்டுகளில் 710 மெகா வாட்டு சக்தியாகவும், 1995-1998 ஆம் ஆண்டுகளில் 840 மெகா வாட்டு சக்தியாகவும், 2005-2006 ஆம் ஆண்டுகளில் 860 மெகாவாட்டு சக்தியாகவும் உயர்த்தப்பட்டன.[5] விசையாழிகள் மற்றும் மின் ஆக்கிகள், அடைப்பான்கள், மின் நிலை மாற்றிகளை தனிமைப்படுத்தல் மற்றும் கடல் நீர் இறைக்கும் இயந்திரங்களை மாற்றுதல் உள்ளிட்ட முக்கிய மேம்படுத்தல் பணிகள் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. மேம்படுத்தல்கள் நிகர மின் உற்பத்தியை 20 மெகாவாட்டு என அதிகரித்து ஒவ்வொன்றும் 880 மெகாவாட்டாக உயர்த்தின.[9]

2017 ஆம் ஆண்டில், இரண்டாவது அலகு மேம்படுத்தப்பட்டு நவீனப்படுத்தப்பட்டது. மேலும் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து உற்பத்தியை 890 மெகாவாட்டாக அதிகரித்தது.[10] 2018 ஆம் ஆண்டு இதேபோன்று அலகு 1 மேம்படுத்தப்பட்டது.[11] புதுப்பித்தல் விண்ணப்பத்தைத் தயாரிப்பதற்காக பராமரிப்பு உரிமமும் நீட்டிக்கப்பட்டது. முறையான உரிமம் நீட்டிப்பு 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வழங்கப்பட்டது. இது உலைகள் 2038 வரை செயல்பட அனுமதிக்கிறது.[12]

இந்த இடத்தில் நான்காவது அணு உலை கட்டப்படுவதற்கான கொள்கை முடிவு 2010 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் பின்லாந்து பாராளுமன்றத்தால் எடுக்கப்பட்டது.[13][14][15] ஆனால், ஜூன் 2015 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் தியோலிசுடென் வோய்மா நிறுவனம் நான்காவது அலகிற்கான கட்டுமான உரிமத்திற்கு விண்ணப்பிக்காது என்று முடிவு செய்தது.[16]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. 2.0 2.1 Europe’s biggest nuclear reactor reaches full power - Arab News
  3. Olkiluoto 3 starts full electricity production a day early – but 14 years late
  4. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  5. 5.0 5.1 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  6. 6.0 6.1 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  7. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  8. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  9. "2011 sees record outage at Olkiluoto 2". Nuclear Engineering International. 9 January 2012. http://www.neimagazine.com/story.asp?storyCode=2061540. 
  10. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  11. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  12. "Finnish Government approves extension of operating licences for OL1 and OL2 plant units". TVO. 20 September 2018. https://www.tvo.fi/news/2042. 
  13. Kinnunen, Terhi (1 July 2010). "Finnish parliament agrees plans for two reactors". Reuters. http://uk.reuters.com/article/idUKLDE6600ED. 
  14. "Olkiluoto 3 delayed beyond 2014". World Nuclear News. 17 July 2012. http://www.world-nuclear-news.org/NN-Olkiluoto_3_delayed_beyond_2014-1707124.html. 
  15. "Finland's Olkiluoto 3 nuclear plant delayed again". பிபிசி. 16 July 2012. https://www.bbc.co.uk/news/world-europe-18862422. 
  16. (24 June 2015). "TVO will not now apply for construction license for OL4". செய்திக் குறிப்பு.

புற இணைப்புகள்[தொகு]