ஒல்கா அலெக்சாண்ட்ரோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒல்கா அலெக்சாண்ட்ரோவா

ஒல்கா அலெக்சாண்ட்ரோவா (Olga Alexandrova) என்பவர் உக்ரைனில் பிறந்த எசுப்பானியா நாட்டு பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1978 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28 ஆம் நாள் பிறந்தார். பெண் கிராண்டு மாசுட்டர், அனைத்துலக பெண் சதுரங்க மாசுட்டர் என்ற பட்டங்களை ஒல்கா பெற்றுள்ளார். எசுப்பானியா நாட்டு கிராண்டு மாசுட்டர் மிகுவெல் இல்லெசுகாசு என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற எசுப்பானிய தேசிய சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியின் இறுதிச்சுற்றில் இவ்விருவரும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிட வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டது. அந்த ஆட்டத்தை சமநிலையில் முடித்துக் கொள்ள இருவரும் ஒப்புக் கொண்டனர். இதனால் ஆள்வார் அலோன்சோ ரோசெல் சமநிலை முறிவு போட்டியின் மூலம் அப்போட்டியில் பட்டம் வென்றார் [1] 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற உக்ரைனிய பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியிலும், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற எசுப்பானியா பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியிலும் ஒல்கா வெற்றி பெற்றார். உலகப் பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் ஒல்கா இரண்டு முறை போட்டியிட்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]