ஒலிம்பியன் சுரேசு பாபு பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒலிம்பியன் சுரேசு பாபு பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் (Olympian Suresh Babu Multipurpose Indoor Stadium) [1] என்பது இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லத்தின் படைவீரர் குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள ஒரு விளையாட்டு அரங்கமாகும். [2] கொல்லம் உள்விளையாட்டு அரங்கம் என்ற பெயராலும்ம் இது அறியப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் இதன் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். கொல்லம் நகரின் மையத்தில் உள்ள பீரங்கி மைதானத்தில், அரசால் ஒதுக்கப்பட்ட 3.6 ஏக்கர் நிலத்தில் ரூ.39 கோடி செலவில் இந்த உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது. [3] இதில் இரண்டாயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அடுக்கு மேடையும், பயிற்சி பெறும் 100 விளையாட்டு வீரர்களுக்கான ஆண்கள் விடுதியும், ஒரு நீச்சல் குளமும் உள்ளன. 21 வகை விளையாட்டுகளில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் போட்டிகளை நடத்துவதற்கான பயிற்சி இங்கு கிடைக்கும். [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Daily, Keralakaumudi. "കൊല്ലത്തിന്റെ കായിക കുതിപ്പിന്ഇൻഡോർ സ്‌റ്റേഡിയം".
  2. "കൊല്ലത്തെ ഇൻഡോർ സ്റ്റേഡിയം നിർമ്മാണം പുരോഗമിക്കുന്നു; പദ്ധതി തുക 42 കോടി".
  3. "ഇൻഡോർ സ്റ്റേഡിയത്തിൽ ഉയരും കളിയാരവങ്ങൾ".
  4. ലേഖകൻ, മാധ്യമം. "കൊല്ലം ഇൻഡോർ സ്‌റ്റേഡിയം നിർമാണം അവസാനഘട്ടത്തിൽ | Madhyamam".
  5. "News@Net - കായിക കുതിപ്പിന് പ്രതീക്ഷയേകി കൊല്ലം നഗരത്തിൽ ഇൻഡോർ സ്റ്റേഡിയം".